"ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது'
"இறைவன் படைத்த உலகை எல்லாம்...மனிதன் ஆளுகின்றான்"
புரிந்துணர்வு கொண்ட மனிதர்களுக்காக ஒரு பார்வை:- இது எறும்புகளின் உலகம்... என்று வைத்துக்கொண்டால்... இந்த எறும்புகள் நிறைந்த பூ உலகத்தில் ஏலியன்கல்தான் மனிதர்கள்..... என்கிற கோணத்தில், உலக மக்கள்தொகை ஒன்று என்றால் அதற்க்கு சமமாக ஆயிரம் எறும்புகள் உள்ளது என கணக்கிட்டால் அதிக எண்ணிக்கை கொண்ட எறும்புகளின் உலகமாகவும் அதில் வாழும் சிறுபான்மையின மனிதன் என்று பார்க்கும்போது, பெரும்பான்மையான மக்கள்தொகை கொண்ட எறும்புகளுக்கு அவைகளின் உலகத்தில் வாழும் மனிதன் என்கிற ஏலியனால் தொந்தரவு ஏற்ப்பட்டும், எறும்புகள் மனித ஏலியன்களை ஒழிக்க முர்ப்படவில்லை என்பதும், அதற்காக முயற்சி கூட செய்யவில்லை என்பதும் நன்கு தெரிகிறது...
இந்த பூ உலகத்தை போலவே இன்னும் பல உலகம் உள்ளது என்பது அறிவியல் கூற்று. ஒரு மனிதன் மற்றும் ஒரு எறும்பு இருவரும் 500 அடி உயரத்திலிருந்து கிழே விழுவதாகக்கொண்டால் மனிதன் தரையை அடைந்ததும் சிதறி உயிர் இழக்கிறான், எறும்பு தரையை அடைந்ததும் அதன் இனத்தையும் உணவையும் தேடி ஓடுகிறது. இதைப்போலவே மனிதன் எறும்பைப்போல மிக இலகுவான (எடை)கணத்துடன், பெரிய இராட்சத ஏலியன்கள் நிறைந்த மற்றொரு, வாழத்தகுந்த உலகம் ஒன்று நிச்சயம் எங்காவது இருக்கும். அங்கு நீங்கள் பிறப்பதற்கு எறும்புகளின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள்.
இறைவன் படைத்த உலகை எல்லாம்...மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்....இறைவன் வாழுகின்றான்
*✍️நினைத்துப் பார்க்கிறேன்.. கோகி 📚*

No comments:
Post a Comment