T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: வலைப்பதிவு வரையும்பயிற்சி-1

Wednesday, September 12, 2018

வலைப்பதிவு வரையும்பயிற்சி-1

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம்.

வலைப்பதிவு வரையும்பயிற்சி-1  

வலைப்பதிவு எழுதுவது எப்படி?
வலைப்பதிவு என்றால் , பிலாக் , அதாவது ஆங்கில மூலச்சொல்லான வெப்லாக் என்பதன் சுருக்கம் என்பதே பொதுவாக சொல்லப்படும் விளக்கம். இணையத்தில் டயரி போல எழுதுவதற்கான வலை வசதியை தான் இப்படி சொல்கிறார்கள். அந்த வகையில் இணைய டயரி அல்லது வலை குறிப்பு என்று சொல்லாம். வலைப்பதிவுக்கு பல வடிவங்களும் தோற்றங்களும் உண்டு என்றாலும் , வலைப்பதிவின் பொதுவான அம்சம் , குறிப்புகள் தேதி வரிசையில் தலைகீழாக அமைந்திருக்கும். அதாவது புதிதாக எழுதிய குறிப்பு முதலில் இருக்கும். கடந்த பதிவுகள் அவை வெளியான தேதி படி வரிசையாக இடம்பெற்றிருக்கும்.
இந்த குறிப்புகளை தான் பதிவு என்கின்றனர். ஆங்கிலத்தில் போஸ்ட். இந்த போஸ்ட் தான் வலைப்பதிவின் முக்கிய அம்சம். அது பற்றி வரும் பாடங்களில் பார்க்கலாம். நாங்களும் இன்று போஸ்ட் போட்டாச்சா என்று கேட்டு ஊக்கம் அளிப்போம்.
இப்போது மீண்டும் வலைப்பதிவுக்கு வருவோம். வலைப்பதிவு என்றால் வெப்லாக் அல்லது பிலாக். தமிழில் இன்னொரு பெயர் வலைப்பூ. சரி, வலைப்பதிவுக்கும் இணையதளங்களுக்கும் என்ன வித்தியாசம்? இணையதளங்களை உருவாக்க வேண்டும். அதற்கு கோடிங் , புரோகிராமிங் போன்றவை தேவை. எச்.டி.எம்.எல் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் வலைப்பதிவு அப்படி இல்லை. அவற்றை ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளனர். நமக்கான வலைப்பதிவை பதிவு செய்து கொண்டு டயரி எழுதுவது போல பதிவிடத்துவங்கிவிடலாம். கோடிங் வேண்டாம். எச்.டி.எம்.எல் வேண்டாம்.
இரண்டாவதாக இணையதளங்களுக்கு அவற்றின் தேவை மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப விதவிதமான வடிவமைப்புகள் இருக்கலாம். வலைப்பதிவுகளிலும் விதவிதமான வடிவமைப்புகள் உண்டு என்றாலும் அடிப்படையில் அவற்றின் அமைப்பு ஒன்று தான். ஆரம்பத்தில் சொன்னது போல, தேதி அடிப்படையில் தலைகீழ் வரிசையில் பதிவுகள் வெளியாகி கொண்டே இருக்கும். இந்த எளிமை தான் வலைப்பதிவின் ஆதார அம்சம் . அதன் பலமும் கூட.
வலைப்பதிவை டயரி போல பயன்படுத்தலாம். ஆனால் அது வெறும் டயரி மட்டும் அல்ல. அது ஒரு வெளியீட்டு சாதனமும் கூட. மற்றவர்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான இணைய களமாக வலைப்பதிவுகள் இருக்கின்றன. இந்த வெளியீட்டு தன்மையே வலைப்பதிவுகளின் வீச்சையும் பயன்பாட்டையும் விஸ்வரூபம் எடுக்க வைக்கின்றன. வலைப்பதிவை விட இணையத்தில் கருத்துக்களை சுலபமாக வெளியிடும் வழி வேறில்லை . இன்று பேஸ்புக் போன்ற சமூக தளங்கள் இந்த பெருமைக்கும் போட்டியிட்டாலும் , கருத்துக்களை வெளியிடுவதை முதலில் ஜனநாயகமயமாக்கி அனைவருக்கும் எளிதாக்கி தந்தது வலைப்பதிவுகள் தான்.
திரைப்பட விமர்சனமா ? பத்திரிகை விமர்சகர் தான் எழுத முடியுமா ? என்ன ? படம் பார்க்கும் சாமான்ய வாசகரும் தான் விமர்சனம் எழுதலாம். வலைப்பதிவுகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தன. அதே போல அரசியல் விமர்சனமும் சாமான்யர்கள் செய்யலாம். கதை ,கவிதை வெளியிட்டுக்கொள்ளலாம். கட்டுரைகள் எழுதலாம். சுய அனுபவத்தை எழுதலாம். சொந்த சிந்தனைகளை பதிவு செய்யலாம். நுகர்வோராக போர்க்கொடி தூக்கலாம்.
இந்த வெளியீட்டு தன்மையே வலைப்பதிவுகளை பலரும் விரும்ப வைத்துள்ளது. சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.வராலாறு எழுதலாம்.
ஆனால் வலைப்பதிவு வெளியீட்டு சாதனம் மட்டும் அல்ல, அவை உரையாடலுக்கானவை. வலைப்பதிவு மூலம் நீங்கள் மற்றவர்களோடு தொடர்பு கொண்டு உரையாடலாம். இந்த உரையாடல் ஒரு துடிப்பான இணைய சமூகமாக உருவாகலாம். அது மட்டுமே வலைப்பதிவு , உங்களுடனான உரையாடலையும் சாத்தியமாக்கும் சாதனம். வலைப்பதிவை சுய தேடலுக்கு பயன்படுத்தலாம். ஒருவர் தன்னைத்தானே ஒருங்கிணைத்து கொள்ள வலைப்பதிவை பயனப்டுத்திக்கொள்ளலாம். வலைப்பதிவை பகிர்வு நோக்கில்லாமல் சுய குறிப்புகளாகவும் பயன்படுத்தலாம். இன்னுமு எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.

அவற்றை எல்லாம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் நீங்கள் ஒரு கூகுள் மின்னஞ்சல் (Start with Google E-Mail ஈ மெயில்) கணக்கு துவங்கவேண்டும்.

அதன் பிறகு கூகுள் ஈமெயில் திறந்து கீழ் காணும் படத்தை பாருங்கள் 
படத்தில் இருப்பது போல சிகப்பு வட்டமிட்ட இடத்தில் தொலைப்பேசி எண்களைப்போல 9 புள்ளிகள் இருக்கும் 

அந்த இடத்தை கிளிக் செய்யுங்கள் 


மேலே உள்ள படத்தை போல அதில் சிகப்பு வட்டம் போட்டுள்ள 
BLOGGER

MORE
என்ற இரண்டு குறியீட்டுள்ள பகுதியை பாருங்கள் 

BLOGGER இல்லை என்றால், கீழை இருக்கும் MORE என்ற குறியை கிளிக் செய்து அதன்பிறகு BLOGGER ஐ தேடி கண்டுபிடித்து அதை கிளிக் செய்யவும் 


மேலே உள்ளதைப்போல CREATE A NEW BLOG என ஒரு பகுதி வரும் 
முதலில் உங்களின் வலைப்பதிவுக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கவும் அதை TITLE என்கிற இடத்தில் எழுதுங்கள் 

தமிழில் எழுத கீழை கண்டா கூகுளை தமிழ் translation பக்கத்தில் தமிழில் எழுதி அதை கட் செய்து தலைப்பை ஓட்டலாம்.



நான் கட் செய்து ஒட்டிய தமிழ் தலைப்பை கீழே படத்தில் பார்க்கவும்

ADDRESS இடத்தில் ஆங்கிலத்தில் இனைய முகவரியை தரவேண்டும்

நீங்கள் குறிப்பிட்ட உங்களின் இனைய விலாசம் வேறு ஒருவர் பயன்பாட்டில் இருந்தால் அது உங்களுக்கு கிடைக்காது சிகப்பு குறி அதை சுட்டிக்காட்டும்

எந்த தலைப்பில் பெயரில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது அதையே பயன்படுத்தலாம்

நமது வலைப்பக்கத்தில் பெயர்:- "வண்ணமிகு வானவில் வலைப்பதிவு வரையும்பயிற்சி" அதாவது "V.V.V.TRAINING"

இந்த நமது வலைப்பதிவின் முகவரி இது 
VVVTRAINING. BLOGSPOT.COM
https://vvvtraining.blogspot.com/


கீழை கண்ட தலைப்பில் நீலநிற டிக் மார்க் வந்தால் கிடைத்துவிட்டது என்பதாக பொருள் பிறகு CREATE என்ற பொத்தானை அழுத்தி உங்களின் புதிய வலைப்பதிவை தொடங்கலாம் கீழ் கண்டா படத்தில் பாருங்கள்

இப்போது தீம் THEME என்கிற உங்களின் வலைப்பதிவுக்கான முகப்பு பக்கத்தை தேர்வு செய்யவேண்டும் மேலே உள்ள படத்தில் SIMPLE என்பதை நான் தேர்வு செய்திருப்பதை போல 

பிறகு CREAT BLOG என்கிற பொத்தானை அழுத்துங்கள் 

பிறகு கீழ்க்கண்ட பகுதியை படத்தை காணலாம் 

GOOGLE DOMAIN என்பது நமது பெயரில் நாம் வாங்கும் இணையதள முகவரியாகும் அதற்க்கு பணம் தந்து வாங்கவேண்டும்.

ஆகவே இலவசமாக வலைப்பதிவு வைத்திருக்க "NO-THANKS" வேண்டாம் என்ற பொத்தானை அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்லுங்கள்.


மேற்கண்ட படத்தில் உள்ளதைப்போன்று புது வலைப்பதிவு பக்கம் உருவாகிவிட்ட பகுதிக்கு நாம் வருவோம் 

இப்போது நீங்கள் படத்தில் உள்ள NEW POST என்கிற பொத்தானை அழுத்தி
கீழ் கண்டா படத்தை போன்ற ஒரு பகுதிக்கு சென்று 


உங்களுக்கு விருப்பமான பதிவுகளை எழுதி SAVE செய்து வைத்து அனைத்து பதிவு வேலைகளும் முடிந்ததும் PUBLISH என்கிற பொத்தானை அழுத்தினாள் அனைவருக்கும் உங்களது இனைய வலைதளப்பாக்கம் பார்வைக்கு வந்துவிடும்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களது வலைப்பதிவு முகவரியை பயன்படுத்தி உங்களது பதிவை நீங்களும் பார்க்கலாம் அல்லது வேறு ஊரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் உங்களது நண்பருக்கும் உங்களது இனைய முகவரியை அனுப்பி நீங்கள் எழுதிய வலைப்பதிவுகளை பார்க்க செய்யலாம் 

மேற்கண்ட வழிகள் அனைத்தும் ஒரு முறை மட்டுமே செய்யவேண்டும் . 

தொடர்ந்து நீங்கள் செய்யும் பதிவுகளுக்கு ஒவ்வொரு முறையும் நீங்கள் படத்தில் உள்ள NEW POST என்கிற பொத்தானை அழுத்தி தொடர்ந்து பதிவுகளை எழுதலாம்

அடுத்த பகுதியில் எப்படி வலைப்பதிவை செய்வது, நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு புகைப்படங்களை எப்படி நிறுவுவது என்பன போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம் 

மேலும் உங்களது சந்தேகங்களை GOOGLE PLUS+ என்கிற கீழை கண்டா பக்கத்தில் குறிப்பிடுங்கள்
இங்கே கிளிக் செய்து https://plus.google.com/u/0/communities/102493832630871987544
கீழை இருக்கும் படத்தில் இருக்கும் GOOGLE PLUS+ பகுதிக்கு செல்லலாம் 
மீண்டும் அடுத்த பயிற்சி பாட பதிவில் சிந்திப்போம் 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.


No comments:

Post a Comment