♎எளிமையான தியானம்.
எல்லோரும் செய்யலாம்.
தவம் :
அமைதியான இடத்தில்
இயல்பாக அமருங்கள்.
கீழே அமர்ந்தால் சிறப்பு. முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம்.
Relax your mind
Relax your body.
இயல்பாக, தளர்வாக புற உலக சிந்தனைகளை தற்காலிமாக தவிர்த்து,
உங்கள் இயல்பான மூச்சை சிறிது நேரம் கவனியுங்கள்.
தியானத்திற்கு தயார் ஆகிவிட்டீர்கள்.
பிரமாண்டமான பிரபஞ்சத்தை நினைவு கூறுங்கள்.
அந்த பிரஞ்சத்திலிருந்து அபரிதமான சக்தி பனிப்படலம் போல வெண்மையாக உங்கள் உச்சந்தலையின் மூலமாக உடலில் இறங்குவதாக பாவனை செய்யுங்கள்.
ஏனோ தானோவென்று எண்ணங்களை எங்கேயோ ஓடவிட்டு,
போனால் போகிறதென்று பாவனை செய்யக் கூடாது.
உங்கள் முழுகவனமும் பிரபஞ்சசக்தி உங்கள் உடலில் மென்மையாக இறங்குகிறது என்று
மனப்பூர்வமாக
நம்ப வேண்டும்.
பிரபஞ்ச சக்தியை எவ்வாறு உணர்வது
உங்கள் உள்ளங்கைகள் இரண்டையும் நேருக்கு நேராக 3 "தூரத்தில் வைத்து, கவனியுங்கள்.
விறுவிறுவென்று ஒரு மெல்லிய உணர்வு இரு உள்ளங்கைகளில் உணர்வீர்கள். இது நம் உடலில் உள்ள உயிர் துகள்களின் சுழற்சியால் வரும் ஜீவகாந்த சக்தி.
இதே போன்ற உணர்வை, பிரபஞ்ச சக்தி நம் உச்சந்தலை மூலமாக நம் உடலில் நுழையும் போது உணரலாம்.
இந்த இடம் Pineal gland.ஸகஸ்ரார சக்கரம் என்று சொல்வார்கள்.
நுழைந்த பிரபஞ்ச சக்தி, மெல்ல தலைமுழுவதும் விறு விறுவென்று பரவுகிறது.
பின் கழுத்து, பின் கைகள், கை விரல்கள் வரை பரவுகிறது. மெதுவாக நிதானமாக ஒவ்வொரு உறுப்பிலும் கவனம் செலுத்தி,
(குறைந்தது ஒரு நிமிடம்)உங்கள் மனம் ஒன்றினால், பிரபஞ்ச சக்தியை நன்கு உணரலாம்.
பின் மார்பு,மேல் வயிறு, அடிவயிறு, இடுப்பு அதனை சார்ந்த உறுப்புகள், பின் தொடைகள், மூட்டுகள், கணுக்கால், இறுதியாக பாதம் வரை பரவுவதாக உணருங்கள்.
மெல்ல ஒவ்வொரு உறுப்பாக, நிதானமாக செய்ய வேண்டும். பத்து நிமிடமாவது எடுத்து கொள்ளுங்கள்.
உடல் முழுவதும் பிரபஞ்ச சக்தி உணர்வாய் உணர்வீர்கள்.
ஒவ்வொரு ரத்தக்குழாயும், நரம்புகளும், தசைகள் எல்லாம் நீக்கமற பிரபஞ்ச சக்தி பரவி இருப்பதாக உணருங்கள்.
உங்கள் உடலில் நோய்வாய்பட்ட உறுப்புகள் ஏதேனும் இருந்தால்,
Liver, Thyroid, Pancreas, Heart, Lungs அதன் மீது கவனம் செல்லத்துங்கள்.
நோய்களுக்கு சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு அதிக சக்தி பரவி,
அங்குள்ள அணுஅடுக்குகள் சீராகி உடல் நலம் பெறுகிறது என்று மனப்பூர்வமாக நினையுங்கள்.
Sub Conscious Mindல்
இந்த உணர்வுகள் பதியும். விரைவில் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றலை பிரபஞ்ச சக்தி மூலமாக பெறும்.
சுமார் 15 நிமிடம். பிரபஞ்ச சக்தி வெண்மை நிறத்தில் பனிப்படலம் போல தலை வழியாக ஊடுருவதாக ஆரம்பத்தில் பாவனை செய்யுங்கள்..
உடல் முழுவதும் அந்த வெண்மை நிற ஆற்றல் பரவுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
15 நிமிட தவத்திற்கு பிறகு, உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைந்து இருப்பதை உணர்வீர்கள்.
காலை மாலை இருவேளையும் செய்யலாம்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இரவில் நிலவில் கனவில்
ஆழ்ந்த உறக்கம் வரும்.
அடுத்து
எண்ணங்கள்
எண்ணங்கள்
எண்ணங்கள்
எண்ணங்கள் மிகவும் வலிமையானவை.
ஒரு முறை எண்ணிய உடனேயே
அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை.
ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது
அது சக்தி பெற ஆரம்பிக்கிறது.
அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.
நான் உன்
நண்பேன்டா என்று
ஆயிரம் முறை சொன்னால்
யானையும்
வசப்படும்" என்பர் பெரியோர்.
அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.
எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது.
மேலும் வலுப்பெறுகிறது.
அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது.
பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.
எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை.
ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால்
அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி
அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.
எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ,
அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.
நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால்
முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும்.
எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும்.
இது மாறாத உண்மை.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விலக்கும் கதிரவன் போல அதனை நீக்கி
அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.
முடியும் வரை அல்ல, உங்கள் நியாயமான இலக்கினை அடையும் வரை.
No comments:
Post a Comment