T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: வாழ்விலே... புனிதம்

Tuesday, July 15, 2025

வாழ்விலே... புனிதம்

📚📚📚📚📚📚📚📚📚📚

*✍️கபீர்தாஸ்*✍️


*🪄வாழ்விலே... புனிதம்*


*கபீர்தாஸ் ஒரு சமயம் கங்கை நதியில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது புரோகிதர்கள் மூவர் அங்கு வந்தனர். படித்துறையில் வெள்ளம் அதிகமாக இருக்கவே*


*ஒரு சொம்பு இருந்தால் நீரை மொண்டு குளிக்கலாம். ஆனால் நம்மிடம் இல்லையே” என வருத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.*


*இதைக் கேட்ட கபீர்தாசர் தன்னிடமிருந்த சொம்பை கங்கைக்கரை மணலால் துலக்கி கங்கை நீரால் கழுவி புரோகிதர்களிடம் கொடுத்தார்.*


*ஆனால் அவர்களோ கபீர்தாசரின் நெசவுத்தொழிலைச் சுட்டிக்காட்டி அந்தச் சொம்பைத் தாங்கள் உபயோகிக்க இயலாது என்றனர்.* 


*கபீர்தாசரோ தான் சொம்பை கங்கைக்கரை மணலாலும் கங்கை நீராலும் சுத்தம் செய்ததைக் கூறி தமது சொம்பை உபயோகிக்கும்படி வேண்டினார்.*


*புரோகிதர்களோ அவர் சொம்பை மறுபடியும் தொட்டுவிட்டதால் அது அதன் புனிதத்தன்மையை இழந்துவிட்டதாகக் கூறினர்.*


*கபீர்தாசர் புரோகிதர்களின் பேச்சால் வருத்தப்படாது சாந்தமாக* 


*அப்படியானால் நீங்கள் வேறொரு கங்கையை வரவழைத்துத்தான்  நீராட வேண்டியிருக்கும்” என்றார்.*


*இதைக்கேட்ட புரோகிதர்கள் வியப்புடன் ஏன் எனக் கேட்க..* 


*"கபீர்தாசர் “*

*ஏனெனில் இந்தக் கங்கையில் உங்களுக்கு முன்பாக நான் குளித்து விட்டேன் எனவே இதுவும் புனிதம் கெட்டு விட்டிருக்கலாம் அல்லவா?” என்றார் .*


*புரோகிதர்கள் வெட்கி தலை குனிந்தனர்.*

📚📚📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment