🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*💐T3- TRAIN THE TRAINER GROUP💐*
https://chat.whatsapp.com/DzfAzMI3ahEKDv6gbPY91T?mode=gi_t
*📚சும்மா இருப்பது எப்படி?*
*ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"*
*என செய்முறை விளக்கம் தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.*
*யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார்.*
*எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய், சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.*
*சிலர் பேசாமலும், சிலர் அசையாமலும், சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர்.*
*சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.*
*இன்னும் சிலர் மலைகள், காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள்.*
*ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல், தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக்கொண்டிருந்தான்.*
*போட்டியின் முடிவு நாள் வந்தது.*
*குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.*
*எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.*
*இதை ஏற்காமல், எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.*
*இதற்கு குரு,*
*"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து, எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்...*
*நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...*
*ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல், அந்தந்த நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே*
*என்று கூறினார் குரு.*
*ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது.*
*மனம், நடந்து முடிந்து போன விஷயத்திற்கும், இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் இருப்பதே சும்மா இருப்பது*
*"ஒன்றை யாக்குதல் மாற்றுதல் அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண். உலகில் வேண்டிய தொழிலெலாம் ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ" என்றான்."*
*-மகாகவி பாரதி.*
*அர்ஜுனா!*
*இந்த உலகில் உன் செயலாவது ஒன்றில்லை. ஆதலால் செயலில் ஆசையும்,பற்றையும் துறந்து வாழ்க" என்றான் கண்ணன்*
*அது போன்றே இந்த சீடனும் நடந்து முடிந்த ஒன்றையும், நடக்கப்போகிற ஒன்றையும் எண்ணி மனம் குழம்பாமல் தன்முன் உள்ள செயல்களை பற்றின்றி செய்தான்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment