T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *Lesson-1, பாடம்-1 சங்கல்பம் தீர்மானம்; முடிவு; உறுதி, குறிக்கோள்*

Monday, March 13, 2023

*Lesson-1, பாடம்-1 சங்கல்பம் தீர்மானம்; முடிவு; உறுதி, குறிக்கோள்*

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-1, பாடம்-1👃📚*

*சங்கல்பம் தீர்மானம்; முடிவு; உறுதி, குறிக்கோள்*

*ஆழ்நிலை தியானத்திற்கான  எனது குறிக்கோளை அடைவது என்கிற சங்கல்பம்*



*சங்கல்பம் என்றால் ஒருவர் மேற்கொள்ளும் தீர்மானம்; முடிவு; உறுதி, குறிக்கோள் என்று பல வகையிலும் குறிப்பிடலாம். நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த காரணத்திற்காக இந்த பூஜையைச் செய்கிறேன் என்று தனது தேவையை இறைவனிடம் சொல்லி வேண்டி பூஜையை ஆரம்பிக்கும் நிகழ்வைப் போலவே   எனது குறிக்கோளை அடைவதற்காக இந்த சங்கல்பத்தை (எண்ணத்தை) உறுதியாக கடைபிடிக்கிறேன்.*


‍*ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்:* *நமது கர்ம வினை கழியும். விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம். மனம் தெளிவடையும் அமைதியடையும். ஆத்ம பலம் அதிகரிக்கும். மூளையின் செயல் திறன், அறிவு திறன் அதிகரிக்கும். செய்யும் செயலில் முழு  ஆற்றலுடன் செயல்பட முடியும். புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.*  *ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும். மனோவியாதி சீராகும். பயம், கவலை, குழப்பம், மன  உளைச்சல் நீங்குகிறது. ஆளுமை திறன் ஓங்குகிறது. முக்கியமாக குறைந்த நேரத்தில் தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது. மேலும் இதயம் நிமிடத்திற்கு 5 முறை தன்னுடைய இயக்கத்தை இயற்கையாக குறைத்து ஓய்வினை அனுபவிக்கிறது, இதனால் இதய கோளாறுகள் தடுக்கபடுகிறது.*

*மேலும்....*

*கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது*

*உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது*

*அமைதியான மற்றும் நிதானமான மனதை ஊக்குவிக்கிறது*

*உடல், உணர்ச்சி மற்றும் மனநலப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதில்..*

*இரத்த அழுத்த அளவை சீராக்கும்..*

*கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது*

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது*

*வலி தொடர்பான நிலைமைகளுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது*

*சுய விழிப்புணர்வை மேம்படுத்துகிறது*

*கவனம் மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுகிறது(

*அடிமையாதல், PTSD, மனச்சோர்வு, தூக்கமின்மை, ADHD சிகிச்சையில் உதவியாக இருக்கும்*

*சுய கட்டுப்பாடு நம்பிக்கைகள் மற்றும் தேவையற்ற   பழக்கவழக்கங்களை  நீக்குகிறது*

*வியர்வை மற்றும் சுவாச விகிதத்தை குறைக்கிறது*

*நேர்மறை சுய உருவம் மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துகிறது*

*உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது*

*தற்போதுள்ள மருத்துவ நிலைகளின் தீவிரத்தை குறைக்கிறது*

*அனுபவ பலனோடு ஒப்பிடும் பொது இவையெல்லாம் மிக மிக சொற்பமே..*


No comments:

Post a Comment