T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *Lesson-2, பாடம்-2 ஆசனம் தரைவிரிப்பு *

Monday, March 13, 2023

*Lesson-2, பாடம்-2 ஆசனம் தரைவிரிப்பு *

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-2, பாடம்-2👃📚*

*🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே தியான யோகம்🧘‍♂️🧘‍♀️*


*முந்தைய வகுப்பு பயிற்சியின் தொடர்ச்சி:-*😷🔔🔔🔔🔔

*ஆசனம் தரைவிரிப்பு *

"ஸ்திரம் சுகம் ஆசனம்" என்பது யோகத்தின் தந்தையான பதஞ்சலி கூறும் வாக்கு.

நாம் வாழும் இந்த உலகமும், உடலும் (பஞ்ச)ஐந்து பூதங்களால் உருவானது. எனவே   உடலுக்கும் உலகத்துக்கும் இடையில் இடைவிடாது ஏதாவது ஒரு பரிவர்த்தனை எப்போது இருந்துகொண்டே இருக்கும், எனவே நாம் ஒரு தரைவிரிப்பை விரித்து அதன் மேல் உட்கார்ந்து  தியானம் பழகும் பொழுது, தியான தன்மைக்கு எதிராக உள்ள சக்தி தடைபடுகிறது. நமது தியானம் எவ்வித  இடையூறுகளும் இல்லாமல் தியான நிலை சித்திக்கும்..

சில இடங்களில் தியானம் செய்யும் பொழுது நாமாகவே அந்த இடத்தின் அதிர்வை உணர முடியும். ஞான அலைகளும் ஓங்கார ஓசையும் என்றும் நிறைந்திருக்கும் கோவில் மற்றும் பூஜையறை மற்றும் சுத்தம் சுகாதாரமான இடத்தில் அப்படிப்பட்ட அதிர்வுகளை சக்திகள் உணரலாம். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் தியானம் புதிதாகப் பழகும் பொழுது இதுபோல மிகவும் உறுதுணையாக உள்ள இடத்தில் தியானம் செய்யும்போது தியானத்தில் எளிதாக லயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறிய செடி வளரும் தருவாயில் சில வேலிகள் அதற்கு அரணாக தேவைப்படும் ஆடு, மாடு மேய்ந்து விடாமல் இருப்பதற்கு மற்றும் அதன் பாதுகாப்புக்கு.

அந்தச் சிறிய செடி ஒரு மரமாக வளர்ந்த பின்னரும் எந்தவிதமான வேலிகளோ பாதுகாப்பு அம்சமோ தேவையில்லாமல் உறுதியாக இருக்கும்.

அதுபோல தியானத்தன்மையை நாம் அடையும் வரை பல விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தியான தன்மையை அடைந்த பின்னர், கண்களை மூடிய நிலையிலோ அல்லது கண்களைத் திறந்த நிலையிலோ சதா தியான தன்மையிலே இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான தியானத்தன்மை அடைந்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் சதா எப்பொழுதுமே தியான நிலையில் இருக்க முடியும்.

No comments:

Post a Comment