T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: பக்குவ நிலை பக்குவமற்ற நிலை.

Friday, April 10, 2026

பக்குவ நிலை பக்குவமற்ற நிலை.

 _*பக்குவ நிலை   பக்குவமற்ற நிலை...*_


_*எகிப்து மன்னன்*_

_*பாரூக் பட்டம்*_ _*துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த*_ _*போதுதான்*_

_*மனிதாபிமானம்*_ _*என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.*_


_ஆனால் அரண்மனை வாசத்திலே அதனை உணர்ந்து கொண்ட_ _சித்தார்த்தர்_

_கௌதம புத்தர்_

_ஆன வரலாறும்_ _உண்டு._


_*கல்லூரியில் படிக்கும் போது ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.*_ 


_கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது._ 


_*இளமைக்காலத்து ஆரவாரம்*_

_*முதுமை அடைய*_ _*அடைய குறைந்து வருகிறது.*_


_ஒவ்வொரு_

_துறையிலும்_ _நிதானம்_ _வருகிறது._


_*இளம்பருவத்தில்*_

_*இறைவனைப்*_ _*பற்றிய சிந்தனை*_ _*அர்த்தமற்றதாகத் தோன்றும்.*_


_வாழ்வில் அடிபட்டு வெந்து நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில்_ _நடைபெறுவது_

_புத்தியில் படும்._ 


_*பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.*_


_பக்குவம் வர வர_

_ரத்தம் வற்ற வற்ற_

_இந்தத்_ _தத்துவங்கள்_ _எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்._ 


_*நடைமுறைக்கு ஒத்த சிந்தனை பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.*_


_கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதைகளையும் மர்மக்கதையும் படிப்பதில் அவன் கவனம் செலுத்துவான்._


_*காதலித்து*_ _*தோற்ற பின் தான்*_

_*அவனுக்கு பகவத் கீதையைப்*_ _*படிக்கும் எண்ணம் வரும்.*_ 


_விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்கு பெயர் போனது._ 

_எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு அதைவிட உலகமே கிடையாது என்று வாதாடும்._ 


_*எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.*_


_பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டும் அல்ல அங்கு சிலையில் இருக்கும் அழகு கூடத் தெரியாது._


_*50 வயதில் கோயிலுக்கு போனால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.*_


_இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டும் இல்லை பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது._


_*ஏன் உடம்பு கூட 20 வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.*_ 

_*40க்கு மேலே தான் இது வாய்வு இது பித்தம் என்ற புத்தி வருகிறது.*_ 


_டென்ஷன் என்ற ஆங்கில_ _வார்த்தைக்கு சரியான தமிழ்_ _வார்த்தை எனக்குப்_ _புரியவில்லை_

_முறுக்கான நிலை_ _என்று _அதைக் கூறலாம்._


_*அந்த நிலையில் எதையும் செய்யலாம்.*_

_*இப்படியும் செய்யலாம்*_ _*என்கிற திமிர் வருகிறது.*_


_அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு இதைத்தான் செய்யலாம்_

_இப்படித்தான் செய்யலாம்_

_என்ற புத்தி வருகிறது._


_*ஞான மார்க்க பக்குவம் அப்படிப்பட்டதுதான்.*_


_உள்ளம் உடலுக்குத் தாவி உடல் ஆன்மாவுக்கு தாவிய நிலையை பக்குவப்பட்ட நிலை._


_*தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை அதையே அழிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிறகு அந்த தேளிற்கு கூட அனுதாபம் காட்டும் ஞானியாக அது மாறிவிடுகிறது.*_


_பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது._ 


_*ஆரம்பத்தில் இதுதான் சரி என்று ஒன்றை முடிவு*_ _*கட்டிவிட்டு*_

_*பின்னால் இது தவறு என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.*_


_சரியாக கணக்கிட்டால் மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்._ 


_*முதற்கட்டம் -*_ 

_ஒன்றுமே புரியாத_ _உணர்ச்சி கூத்து._


_*இரண்டாவது கட்டம் -*_

_ஏதோ இருப்பதாக_ _ஆனால் தெளிவாகத் தெரியாத மயங்கிய நிலை._ 


_*மூன்றாவது கட்டம் -*_

_பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும் நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை._


_*இந்த மூன்றாவது நிலையை முதற்கட்டத்திலே எழுதியவர்கள் பலர் உண்டு.*_ 


_சுவாமி விவேகானந்தரைப் போல வளைந்து கொண்டே_

_வளர்ந்த மரங்கள் உண்டு._ 


_*அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.*_


_மற்றவர்கள் அனுபவத்தின் மூலமாகதானே பக்குவ நிலையை அடைய வேண்டி இருக்கிறது._


_*தூக்கத்திற்கும் விழிப்பிற்கும்*_

_*நடுவே தடுமாறும்*_ _*மனிதர்கள்*_

_*நாட்டிலே மிக அதிகம்.*_


_ஒன்று தூங்குவது என்றால்_

_நிம்மதியாக தூங்கி விட வேண்டும்._ 


_*விழிப்பதென்றால்*_

_*சுறுசுறுப்பாக*_ _*விழித்துக் கொள்ள வேண்டும்.*_ 


_தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலன் கிட்டாது._

_விழிப்பின் பலனும் கிட்டாது._ 


_*மனப்பக்குவம் என்பது*_

_*அனுபவங்கள் முற்றி பழுத்த நிலை.*_ _*அந்த நிலையில்*_

_*எதையுமே இல்லை என்று மறுக்கின்ற எண்ணம் வராது.*_


_இல்லை என்று சொல்பவனுக்கு_

_எந்த புத்தியும்_ _தேவையில்லை_

_எதைக் கேட்டாலும் இல்லை என்று_ _சொல்ல முட்டாளாலும் முடியும்._


_*ஆனால் உண்டு என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலை நாட்ட போதுமான அறிவு தேவைப்படும்.*_


_பூமிக்கு கீழே என்ன இருக்கிறது_

_என்று கேட்டால் எதுவுமே இல்லை_

_என்று குழந்தை கூட_

_பதில் சொல்லி விட முடியும்._

No comments:

Post a Comment