T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: மனிதன் குற்றம் காணும் இயல்பை மாற்றிக் கொண்டால்

Friday, April 10, 2026

மனிதன் குற்றம் காணும் இயல்பை மாற்றிக் கொண்டால்

*🌸🌼🌿மனிதன் குற்றம் காணும் இயல்பை மாற்றிக் கொண்டால்...*

*༺🌷༻*

ஒரு சிஷ்யன் பிச்சை எடுக்கச் சென்றான். மாலை வரை அலைந்த பிறகும் ஒன்றும் கிடைக்கவில்லை. இரவு பசியால் வாடிய முகத்துடன் குருவிடம் வந்தான். பிச்சை ஒன்றும் கிடைக்காததால் அவனுக்கு இறைவன் மீது கோபம் வந்தது.


கோபமான குரலில் அவன், இனி நான் இறைவனை நம்பி வாழப் போவதில்லை. 


நீங்கள், ‘இறைவனை நம்பினால் நமக்குத் தேவையானவை எல்லாம் கிடைக்கும் என்று சொன்னீர்கள். 


ஒரு வேளை உணவுகூடத் தர இயலாத இறைவனை நான் எதற்காக நம்ப வேண்டும்? இறைவனை நம்பியதே தவறாகப் போய்விட்டது' என்று குருவிடம் கூறினான்.

*༺🌷༻*


குரு அவனிடம்,"உனக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். உன் கண்களை தருகிறாயா?" என்று கேட்டார்.


சிஷ்யன் பதில் சொன்னான், "கண் போய்விட்டால் என்னால் பார்க்க முடியாதே? எவ்வளவு பணம் தந்தாலும் யாராவது கண்களை விலைக்கு விற்பார்களா?"


"அப்படியானால் கண் வேண்டாம். உனது நாக்கை எனக்குத் தருகிறாயா?" குரு கேட்டார்.


"நாக்கைத் தந்தால் நான் எப்படிப் பேசுவது?'' என்றான் சிஷ்யன்.

*༺🌷༻*

"சரி, உனது கையைத் தருகிறாயா? அது முடியாதெனில் காலைத் தந்தாலும் போதும். ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன்"


"பணத்தை விட விலைமதிப்புள்ளது உடலின் அங்கங்கள். அதைக் கொடுக்க யாராவது முன் வருவார்களா?" சிஷ்யன் சொன்னான்.

*༺🌷༻*

சிஷ்யனின் பதிலைக் கேட்ட குரு. "உனது உடல் பல இலட்சம் ரூபாய் விலை மதிப்புள்ளதாகும். இதை இறைவன் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் உனக்குக் கொடுத்திருக்கிறார். 


இருந்தபோதும் நீ இறைவனைக்

 குறை கூறுகிறாய். 


விலைமதிப்பற்ற இந்த உடலை நீ சோம்பேறியாக இருப்பதற்காகத் தரவில்லை 


நன்கு கர்மம் செய்து வாழ்வதற்காகவே உனக்கு இறைவன் தந்திருக்கிறார்" 

என்று அறிவுறுத்தினார்.


*༺🌷༻*

இறைவன் உலகம் முழுதும் நமக்கு ஏராளமானச் செல்வங்களைத் தந்திருக்கிறார். 


நமது குற்றம்- குறைகாணும் இயல்பை மாற்றிக் கொண்டால் இறைவன் எத்தனை கருணையானவர் என்பது தெரிய வரும்.


💐நன்றி🙏

No comments:

Post a Comment