_*"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை"*_
_*சீடன் கேட்டான்.*_
_*குரு ஒரு கதை சொன்னார்:*_
_"கடவுள் இருக்கிறார் என்று நம்பிய_
_ஒரு மனிதன் மெல்ல சொன்னான்,_ _'கடவுளே! என்னோடு பேசுங்களேன்!"_
_*அப்போது குயில் ஒன்று பாடியது.*_
_அதைக் காதில் வாங்காத அவன்,_
_உரத்த குரலில் கத்தினான்: 'கடவுளே, என்னோடு பேசுங்களேன்!' உடனே உரத்த இடியோசை, எழுந்தது,_
_*அதையும் பொருட்படுத்தாத அவன்,*_ _*'பேசாவிட்டாலும், உன்*_ _*தரிசனமாவது தரக்கூடாதா' என்று*_
_*இறைவனிடம் கேட்டான்.*_
_சுடர்விட்டுப் பிரகாசித்தபடி,_
_வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது. அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்:_
_*'ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா"*_
_கடவுள் மெல்லக் கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்._
_*அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு,*_ _*நடந்தபடி சொன்னான்.*_
_*'கடவுள் இல்லை இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம்.*_
_பார்க்க முடிந்திருக்கும். அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே"_
_*கதையைக் கேட்ட சீடன் சொன்னான்.*_
_"புரிந்தது குருவே கடவுள்,_
_தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்._
_நாம் தான் புரிந்து கொள்வதில்லை!"_
_*நீதி:*_
_*இங்கு அங்கு என்றில்லாமல் கடவுள் "எங்கும்" நிறைந்து இருக்கிறார்.*_
_*மனிதர்கள் தான் அவரைப் (உணர்வதில்லை) பார்ப்பதில்லை.*_
No comments:
Post a Comment