T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *- ஜனக ரிஷி தந்த பிரம்ம ஞானம்!*

Tuesday, July 21, 2026

*- ஜனக ரிஷி தந்த பிரம்ம ஞானம்!*

 🙏🥥🥥🫐🥭🌼🌺🙌🛕🙏

*- ஜனக ரிஷி தந்த பிரம்ம ஞானம்!*


*வியாச முனிவரின் மகன் சுக முனிவர். அவரை எல்லோரும் ‘சுக பிரம்ம மகரிஷி’ என்றே அழைப்பர். ஒருநாள் அவர் தன் தந்தையிடம்,  ‘பிரம்ம ஞானம் பெற எனக்கு வழி சொல்லுங்கள்’’ எனக் கேட்டார்.*


*‘மிதிலைக்குச் செல். அரசர் ஜனகரே உனக்குப் பிரம்ம ஞானம் வழங்கத் தகுதி உடையவர்’’ என்றார் வியாசர்.*


*அதன்படி மிதிலை அரண்மனையை அடைந்தார் சுக முனிவர்.காவலர்களிடம், ‘உங்கள் அரசரிடம் போய் சுக பிரம்ம மகரிஷி வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள்’’ என்றார்.*


*காவலாளிகளும் ஜனகரிடம் சென்று, சுக பிரம்ம மகரிஷி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு ஜனகர், ‘அவருடன் வந்திருக்கும் மற்ற இருவரை விட்டுவிட்டு, அவரை மட்டும் தனியாக வரச் சொல்லுங்கள்’’ என்றார்.*


*‘அரசே! அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்’’ என்றார்கள் காவலாளிகள்.*


*ஜனகர், ‘நான் சொன்னதை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்!’’  என்றார் கண்டிப்புடன்.*


*சுக முனிவரிடம் வந்த காவலர்கள்,  அரசர் கூறியதை அப்படியே அவரிடம் தெரிவித்தனர்.*


*அதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார் சுக முனிவர். பின்னர், காவலாளிகளுடன் சென்று அரசரைச் சந்தித்து, ‘நான் சுக பிரம்மம் வந்திருக்கிறேன்’’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.*


*இப்போது ஜனகர் என்ன சொன்னார் தெரியுமா?*


*‘உங்களைத் தனியாகத்தானே வரச் சொன்னேன்..! இப்போதும் துணைக்கு ஒருவரை வைத்துக்கொண்டிருக்கிறீரே?’’ என்று கேட்டாராம்.*


*சுகருக்கு இப்போதுதான் தனது தவறு புரிந்தது. அவர் சொன்னார்... ‘`மன்னிக்கவும். நான் சுகன் வந்திருக்கிறேன்!’’*

*ஆம்... பிரம்ம ஞானத்தை அல்லது சுத்த (மெய்) ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கு, "அகங்காரம்/ஆணவம்/தான் என்ற பெருமை" அறவே கூடாது!*

🙏📚📚📚📚📚📚📚📚🙏

No comments:

Post a Comment