*
Meditation தியானம்
*


*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே தியான யோகம்
*




*
தியானம் என்பது மனத்தை அடக்கும் முறையல்ல; மனதினைப் புரிந்து கொள்ளுகின்ற பெருமுயற்சி!

உணர்ந்தால் வெற்றிபெறலாம்*
*
என்ன கொடுப்பது என்பதை இறைவன் தீர்மானிக்கிறான்.*

*
எப்போது என்பதை காலம் தீர்மானிக்கிறது.*

*
எப்படி என்பதை இயற்கை தீர்மானிக்கிறது.*

*
அதைப் பெறுவதற்கான தகுதியை மனிதன் மட்டுமே தீர்மானிக்கின்றான்*

*
எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கப் பழகு.*

*
அனைத்தையும் ஆழ்ந்து உற்றுநோக்கப் பழகு.*

*
அனைத்தையும் ஆழ்ந்து வாசிக்கப் பழகு.*

*
எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்கப் பழகு.*

*
ஆழ்ந்த சிந்தனை அமைதியில் தான் பிறக்கின்றது. அமைதியை உள்முகமாக உன் உள்ளே தேடு. அது ஒரு ஆன்மீக பொக்கிஷம்! அங்கே அகவிருள் அகன்று அறிவொளி வீசட்டும். உன்னை நீயே விலகி இருந்து கவனி என்கிறார்கள் ஞானியர்.*

*
சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை -
கண்ணதாசன்.*


*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி
*














No comments:
Post a Comment