*
Relaxation (தளர் ஓய்வு) அற்புத பயிற்சி.*

*📚Relaxation (தளர் ஓய்வு) அற்புத பயிற்சி.*
https://chat.whatsapp.com/DzfAzMI3ahEKDv6gbPY91T
*Exercise ( உடற்பயிற்சி) முடித்த பிறகு*
*Relaxation (தளர் ஓய்வு) பயிற்சி செய்தல் நலம்.*
*ஆனால் நான் பார்த்த வரை, exercise உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் எழுந்து விடுவார்கள் பெரும்பாலோனேர்.*
*Relexation தளர் ஓய்வு, கிட்டத்தட்ட தியானம் போலவேதான்.*
*அது ஒரு Pshycology treatment போல.*
*ஒவ்வொரு உடலின் பாகங்களோடு மானசீகமாக friendly உரையாடல்.. என்னை பொறுத்தவரை அவசியம் தேவை.*
*உதாரணமாக பாதங்கள். நம்மை நமது உடலைவிரும்பிய இடத்துக்கெல்லாம் அழைத்துச் செல்லும் நண்பன்.*
*உனக்கு ஓய்வு தேவை. என் மனதை, காந்த ஆற்றலை,உன் மேல் பாய்ச்சி, உன்னை என சங்கற்பங்களால் சந்தோசப்படுத்துகிறேன். சங்கற்பம் முடித்த பிறகு மானசீகமாக அன்போடு சொல்வேன். ஓய்வெடு Relax Relax நண்பனே,,,*
*அதே போல ஒவ்வொரு உறுப்புகளும் பாதம் முதல் தலைவரை இந்த நிலைப்பாடு அவசியம் தேவை.*
*இரத்த ஓட்டமும், வெப்ப ஓட்டம் காற்றோட்டம், உயிரோட்டமும் ஒவ்வொரு செல்லையும் ஊக்குவித்து, காந்த ஆற்றலால் நிரம்பி, வா மனோகரா இந்த உலகை ஒரு கை பார்த்து விடுவோம் என்று என் உறுப்புகள் என்னோடு ஒத்துழைப்பது போல எனக்குள் ஒரு மானசீக உரையாடல்.*
*சில சமயம் நல்ல relax செய்யும்போது ஒரு transtate, எண்ணமற்ற நிலைக்கு நாம் பயணிக்க உதவும்.*
*பல முறை அந்த அனுபவம் எனக்குள் ஏற்பட்டதுண்டு.*
*தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்? இதுதானோ என்று கூட தோன்றும்.*
*இதை படுத்துக் கொண்டே செய்ய முடியாத நிலையில், பயணங்களின் போது, அலுவலக ஓய்வு நேரத்தில் கூட நன்றாக நம்மை நாமே relax செய்து கொள்ளலாம் இருக்கையில் முடிந்தவரை சாய்ந்து அமர்ந்தவாறே செய்யலாம்.*
*சில சமயம் பணியின் அழுத்தம் காரணமாக, காலையில் exerecise செய்ய முடியாமல் போனால் கூட,ஒரு 10 நிமிட relaxation அலுவலகத்தில் செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதாகவே உணர்வேன்.*
*இது ஒரு அற்புத பயிற்சி. பலர் இதை ஏனோ சீரியஸாக எடுத்து கொள்வதில்லை.*
*இப்பொழுது youtubeல் கூட கேட்கலாம் இனிய இசையின் பிண்ணனியில் செய்வதை பார்க்கமுடியும்.*
*இரவில் படுக்கும் போது இந்த பயிற்சி செய்தால், ஆழ்ந்த உறக்கம் மட்டுமல்ல, அதிகாலையில் எழுந்திருக்கும் போதே உற்சாகமாக இருக்கும்.*
*மனதின் எரிவு நிலை நீங்கும். இதயத்திற்கும் உற்ற நண்பன். Sleepingdose தவிர்க்கலாம். BP மாத்திரை அளவும் குறையும்.*
*சுருக்கமாக உள் உறுப்புகள் அனைத்தும் உங்களை வாழ்த்தும்.*
*இது அருட்தந்தையின் (சேஷாத்ரி சாமிகளின்) அற்புத உடல்நல பரிசு நம் அனைவருக்கும்.*
*🧘♀️அனைவரிடமும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும்.. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.🙏*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍
https://chat.whatsapp.com/DzfAzMI3ahEKDv6gbPY91T
📚🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️📚

No comments:
Post a Comment