*
Meditation தியானம்
*


*
Lesson-13, பாடம்-13
*




*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்
*




*முந்தைய வகுப்பு பயிற்சியின் தொடர்ச்சி:-*









*NEUTRAL GROUNDING AND ITS ADVANTAGES*
*சரி இதை எப்படி நாம் பயிற்சி செய்து ஒரே சீராக நம்மையும், நமது மனதையும் பாதுகாத்து வைத்துக்கொள்ளமுடியும். அடுத்த வகுப்பில் பார்க்கலாம்...*
*இதுவரை நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் நாம் நமது ஆற்றலை, சக்திகளை சுயமாக சம்பாதித்துக்கொள்வதைப்பற்றி பார்த்தோம்.*
*முக்கியமாக.. பெறுவது மட்டும் யோகமல்ல. பெற்ற சக்தியை (யோகத்தை) பயன்படுத்துவதில் மட்டுமே நாம் வெற்றி பெற்றதாக பொருள்... உங்களுக்கு எளிமையாக புரியவேண்டுமானால்.. பலர் புத்தகத்தை படித்து பல விவரங்களை தெரிந்துகொள்கிறார்கள்.. ஆனால் புத்தகத்தில் தெரிந்துகொண்டத்தை தமது வாழ்க்கையில் பயன்படுத்தி பயநடைந்தவர்கள் மிக மிக குறைவு...*
*எந்தெந்த வழிகளில் சிறப்பான (யோகம்) சக்தியை பெறமுடியும்.*
*1.பக்தி மற்றும் தியானத்தின் வழியே சக்தியை பெறுவது.*
*2. மூச்சுப்பயிற்சி செய்து அதை உணர்ந்து சகத்தியை பெறுவது.*
*3. சித்தர் வகுத்து தந்த உப்பு வைத்திய (SALT THERAPY) முறையில். சக்தியை பெறுவது.*
*4. ஏராளமான சக்திகளை கொண்ட இயைக்கை பொருட்களை கையாள்வதால் நாம் சக்தியை பெறுவது.(அதாவது, மூலிகை பொருட்கள், வெவ்வேறுவித சக்தி கற்கல்(அதாவது நவரத்தின, சுருமா, அஞ்சனகல் போன்றவை).*
*5. நம்மை சுற்றியுள்ள காந்தப்புலத்தை (ஆரா Aura) சீரமைத்து சக்தியை பெறுவது.*
*6.நமது சுய அறிவை பயன்படுத்தி சக்தியை பெறுவது (அதாவது, நேர மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, திட்டமிடுதல், சிக்கனம், சேமிப்பு, திறம்பட செயல்படுவது..புத்தகங்களை படித்து பயநடைவது போன்ற வழிகளில்...)*
*7. சொல் மற்றும் மந்திரம், நம்பிக்கை போன்ற மன உணர்வுகளை கொண்டு சக்தியை பெறுவது..(அதாவது நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, கனவு காண்பது, அதை செயலாக்க முயற்சிப்பது போன்றவைகள்..)*
*8. மற்றவர்களுக்கு உதவி செய்து அதற்கான பயன்களை (மாற்று சக்தி) பெறுவது. (அதாவது மற்றவரவளுக்கு கொடுப்பது, உதவிகள் செய்து அதனால் மாற்று சக்தியாக திரும்ப பெறுவது என்கிற முறையில் Give and Take Policy)*
*9. மற்றவர்களை பாராட்டி, நன்றி தெரிவித்து, மகிழ்ச்சியை தந்து பெரும் அளப்பரிய சக்திகள்...*
*10.யோக முறைகளின் வழியே மிகப்பெரிய அளப்பரிய சக்தியை பெறுவது...(அதாவது..யோகாசன முறை, முத்திரை, மற்றும் குண்டலினியோகம் போன்ற பல ஆசிரம பயிற்சிகளால் பெறுவது)*
*இப்படி மேலும் பல வழிகளில் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் பல சக்திகளை பெற்று அவற்றை பயன்படுத்தி சிறப்பான நிலையை பெறுவது...*
*அடுத்த வகுப்பு பயிற்சியில், நம்மிடம் இருக்கும் ஆற்றல்/சக்தி என்ன? அது எப்படிப்பட்ட சக்தி, என்பதை எப்படி என்று சிறு சிறு சோதனைகள் செய்து தெரிந்துகொள்வதெப்படி?*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி















No comments:
Post a Comment