*
ப்ராணாயாமம், மூச்சு பயிற்சி செய்யும் முறை (Methods)*

*
மூச்சு பயிற்சிக்கு உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும்.*

*
சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும்.*

*
புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும்.*

*
பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.*

*
இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.*

*
வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.*

*
இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.*

*
மூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.*

*
இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது நாடி சுத்தமடையும்.*

*
சாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும். துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.*













No comments:
Post a Comment