*
Meditation தியானம்
*


*
Lesson-15, பாடம்-15
*




*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்
*




*ஸ்தூல, சூட்சும அமைப்பு*
*உயிர்களின் அமைப்பு ஸ்தூல, சூட்சுமம் என இரு வகைப்படும்.*
*சூச்சுமா உடல் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம், பொன்றவைகளைக்கொண்டது..*
*ஸ்தூல உடல் என்பது நமது வெளிப்புற தோற்ற உருவம்..*
*ஸ்தூலத்தை அடிப்படையாக வைத்தே சூட்சும உடல் உள்ளது..*
*அதேவேளையில் இடைவிடாத சாதகம் போன்ற பயிற்சியால் சூச்சும உடலை மாற்றக்கூடிய சக்தியும் ஸ்தூல உடம்புக்கு உள்ளது.*
*சூட்சும.. மனம், சித்தம் போன்றவை எளிய பயிற்சியால் வசப்படாது.. அதை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல சூட்சும புத்தி வலுவாக இருக்கவேண்டும்...*
*சூட்சுமம் (ஆன்மா), ஸ்தூல(சரீரம்) இவற்றை இணைத்து இயக்கும் ஒரு பாலமாக இருக்கும் சக்திதான் " பிராணன்" அதாவது (உயிர் மூச்சை) பிராண சக்தியின் அளவுக்கு ஏற்ப ஒருவரின் பலம் பலவீனம் அமைந்திருக்கும்.*
*பரம்பொருளை நாம் அடைவது என்பது..*
*நாம் அதனை அடையவில்லை...*
*அதுதான்.. நம்மையடைத்து.. அதன் வசமாக்குகிறது...*
*உதாரணம்:-*
*பெரிய நீர் நிரம்பிய அணைக்கட்டின் அடியில் உள்ள நீரில் சென்று சேர.. அந்த அணையின் அடி சுவற்றின் அடியில் ஒரு துளை போட்டு அதன் வழியாக அங்கே சென்று சேர நினைக்கும் மனம்.. ஆனால் என்ன நடக்கிறது நாம் போட்ட துளையின் வழியாக நாம் அல்லவா நீரில் நுழைந்திருக்க வேண்டும்... ஆனால் அதற்கு பதிலாக துளையின் பாதை வழியாக தண்ணீர் அல்லவா நம்மை நோக்கி வருகிறது.. எந்த தண்ணீரை நாம் அடைய முயன்றோமோ அதுவே நம்மை அடைந்து, காற்றாட்டு வெள்ளமாக நம்மையும் அடித்துக்கொண்டு செல்கிறதலவா..*
*
மேற்கண்ட மேலும் பல உதாரணங்கள் விவரங்களை சித்த வித்தை பயிற்சியில் நாம் உணரமுடியும்.*

*
பயிற்சி உதாரணம்:- சகுனியின் தாயக்கட்டை உருட்டும் சூட்சும சக்தியில் செயலும்...*

*
ஒரு ஜடப் பொருள் தானாக நகரும், அல்லது நகரவைக்கும் செயல்முறை..*

*
உதாரணம்:- ஆடியோ, வீடியோ இணைப்பில் காண்க..*



*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி















No comments:
Post a Comment