*
Meditation தியானம்


*
Lesson-6, பாடம்-6
*




*
பிராணாயாமம்.. சுவாச விழிப்புணர்வு
*


*
சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்
*


*
மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*




*நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம்
சுவாசம். பிராணாயாமம்
என்பதை பற்றி*


*
ஜெகத்ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளுரை
* 



*தன்னில் இருக்கின்ற ஜீவசக்தி பிரம்மரந்திரத்தைத் திறக்காமல் , அத்துடன் சென்று முட்டி , அதோகதியாக வெளியில் போய் நசித்துப் போகின்றதால் தான் செத்துப் போகின்றது.*
*அதனால் தன்னுடைய ஜீவசக்தியை வெளியில் விடாமல் தன்னுள்ளிலேயே மேல் கதியாக நடத்தி , அந்த ஜீவனால் பிரம்மரந்திரத்தைத் தட்டித் திறக்க வேண்டும்.*
*அவ்விதம் செய்து ஜீவன் பிரம்மரந்திரத்தில் லயித்து தானாகி தன்மயமாகித் தீருகின்றதே "மோக்ஷம்" .*
*அப்பொழுது ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமாயிற்று.*
*இதற்கே " ஜீவேஸ்வர ஐக்கியம் " என்று சொல்லப் படுகிறது.*
*ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமானால் என்னவாகும் ? மோக்ஷமாகும்.*
*இதற்குத் தான் பிராணா அபானன் மார்களை ஐக்கியப் படுத்துவதென்று சொல்வது.*
*பிராணன் நம்முடைய உள்ளில் இருப்பது.*
*அபானன் வெளியில் போவது.*
*அப்படி வெளியில் போகின்ற அபானனை , வெளியில் போக விடாமல் பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே ஒரே கதியாய் நடத்துவதற்குத் தான் " பிராணாயாமம் " என்று சொல்வது.*
*பிராணாயாமம் என்றால் பிராணனை ஆயாமம் செய்கிறது.*
*ஆயாமம் செய்கிறது என்றால் தடுத்து நிறுத்துகின்றது அல்லது நேரே கொண்டு போகின்றது அல்லது நீட்டுகின்றது.*
*அதாவது உள்ளில் இருக்கின்ற பிராணனை அபானனாய் வெளியில் போகாமல் உள்ளிலேயே தடுத்து நிறுத்துகின்றது.*
*அப்பொழுது பிராணனுக்கு நேர் கதியாகின்றது.*
*இப்பொழுதோ பிராணன் நேரே போகாமல் வளைந்து ஐந்து துவாரங்களின் வழியாக வெளியில் போய் நசித்துக் கொண்டிருகின்றது*
*அப்படி வெளியில் போகாமல் தன்னுள்ளில் அடங்கி மேல் கீழ் ஒரே கதியாய் வரும் பொழுது நேரே ஆகின்றது.*
*அதற்காகவே பிராணனை நேரே கொண்டு போக வேண்டுமென்று சொல்லுவது.*
*" நீட்டுக " என்றால் நீளமாக்குக என்றாகின்றது.*
*எதை நீளமாக்க வேண்டிய தென்றால் நம் உள்ளில் இருக்கின்ற பிராணன் நீளமாக இல்லாமல் வளைந்து அபானனாய் வெளியில் போய் நசித்துக் கொண்டிருக்கின்ற அதனையாகும்.*
*அந்த அபானனை வெளியில் விடாமல் பிராணனுடன் சேர்த்து மேலே கொண்டு போகும் பொழுது நீளமாகின்றது.*
*இதற்காகும் " நீட்டமாக்குக " என்று சொல்வது.*
*அப்பொழுது நாம் தூங்குகிற சமயத்தில் நம்முடைய கதி எவ்விதமோ அவ்விதமே தூங்காதிருக்கின்ற சமயத்திலும் ஆகித்தீரும்.*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*
சுவாசம் பற்றி உணர்ந்த நாம், அதை சரியாக பின்பற்றுவதில்லை.
*


*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி
*














No comments:
Post a Comment