*
Meditation தியானம்
*


*
Lesson-14, பாடம்-14
*




*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்
*




*முந்தைய வகுப்பு பயிற்சியின் தொடர்ச்சி:-*









*அடுத்த வகுப்பு பயிற்சியில், நம்மிடம் இருக்கும் ஆற்றல்/சக்தி என்ன? அது எப்படிப்பட்ட சக்தி, என்பதை எப்படி என்று சிறு சிறு சோதனைகள் செய்து தெரிந்துகொள்வதெப்படி?*












*
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்..
*


*
எனக்குள்ளே ஏராளமான ஆத்ம சக்தியை நான் எப்படி உணர்ந்துகொண்டேன்..?*

*
அந்த ஆத்ம சக்தியை அதிகரிக்கவும், சேமிக்கவும் செய்வதோடு அந்த ஆற்றல்களை பயன்படுத்தவும் நான் எப்படி கற்றுக்கொண்டேன்..*

*
என்னுடைய ஒவ்வொரு செயலையும் நான் கவனிக்க தொடங்கினேன்..*

*
என்னுடைய மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனித்து வந்தேன்*

*
நடக்கும் போதும்*

*
பேசும் போதும்*

*
குளிக்கும் போதும்*

*
சாப்பிடும் போதும்*

*
என்னுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்தேன்..*

*
ஒவ்வொன்றும் கவனிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைத்துக்கொண்டேன்...*

*
கடந்து போனதை மறந்து விட்டு, இப்போது நிகழ்த்து கொண்டிருப்பதை அனுபவிக்க கற்றுக்கொண்டேன்.*

*
எதையும் உன்னிப்பாக கவனித்திருக்கும் போது தெளிவு பிறக்கிறது..*

*
கவனிக்கும் போது என்னுடைய அவசர கதி நிதானமாகிறது..*

*
எண்ணங்கள் மெலிந்து போய் வலுவிழந்து விடுவதை உணரமுடிந்தது..*

*
உன் மனம் பளிச்சென்று கண்ணாடி போல் பிரதி பலிக்கிறது.. தெரிகிறது...*

*
எல்லாவற்றிலும் தெளிவு உதிக்கும்போது ஆனந்தம் மலர்கிறது...*


*
ஆத்மா விழித்திருப்பதே (விழிப்புணர்வே Awareness) வாழ்வு என்று தெரிந்து விடுகிறது..*

*
ஆத்ம விழிப்பை அழித்து விட முடியாது என்பதால் இனி அதற்கு இறப்பில்லை என்பது தெரிந்து விடுகிறது../ புரிகிறது..*

*
இறப்பை நான் அணுகும்போது அதையும் என்னால் கவனிக்க முடியும்*

*
இறப்பை கவனித்துக் கொண்டே இருந்தாலும்.. எனது கவனிப்பது இறப்பதில்லை..*

*
என்னுடைய கவனிப்பு நிலைத்திருக்கும் பிரபஞ்ச பிரக்ஞையாகிப் போகும்...*

*
அகம் பிரம்மாஸ்மி*

*
நானே பிரபஞ்சப் பிரக்ஞை*

*
நானே சத்தியம்*

*
விழிப்படைந்த எனது மனம் உள் நோக்கி நகருகிறது..*

*
விழிப்படையாத மனது வெளியே இருப்பதை நோக்கிப் பாய்கிறது...*

*
இப்போது நிஜம் எனக்கு புரிகிறது... அது எனக்கும் எனது ஆத்மாவிர்க்கும் மிகப்பெரிய சக்தியை தருகிறது...*

*
இந்த ஆத்ம சக்தி என்னிடம் நிறைந்திருக்கும் போது.. சதா ஆனந்தம்.. நிறைந்திருப்பதை உணருகிறேன்...*

*
நமக்குள் இருக்கும் இந்த ஆத்ம சக்தியை புரிந்துகொண்டால் போதும்.. நாம் நினைப்பதும்.. நினைத்துப் பார்க்காதவைகளும் கூட நமது தேவைக்கும் அதிகமானதை நமக்கு வாரிவழங்கும்...*



*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி















No comments:
Post a Comment