*
சுழுமுனை நாடி திறப்பு என்பது..*


*சிவலிங்கம் என்பது நம்முடைய ஆதி சிவ நெறியில்....*
*ஆகமத்தை வகுத்தது சிவன்..*
*ஆகம முறைப்படி உயிர்களின் தலையே "கருவரை.."*
அதிலும் *நெற்றியே* சிவம் இருக்கும் வெட்டவெளி...
நாம் சுவாசிக்கும் காற்றானது *மூக்கு* வழியே நுழைந்து *சுழிமுனைக்குச்* சென்று,
அங்கிருந்து *கீழ்நோக்கி நுரையீரலில்* வடிகட்டி(பில்ட்ராகி,)
*மூலாதாரம்* சென்று அங்கிருந்து,
*இதயம்* வந்து மீண்டும்,
*சுழிமுனை* வழியாக வெளியேறுகிறது.
இந்த காற்றானது *உள்ளும், புறமும் சுழிமுனை* வழியாக செல்வதன் மூலம்,
*சுழிமுனையிலிருக்கும் ஆன்மாவானது சுழல்கிறது..*
*( பூமி மற்றும் பிற கோள்களைப் போலவே)*
*நம்மையும் அறியாமல் மூச்சை இழுத்து சுவாசித்து ஆன்மாவை இயக்கும் அந்த "சக்தியே" கடவுள்.*
சீவனை இயக்குவதால் *சிவன்* என சித்தர்கள் பெயர் சூட்டினர்.
இந்தசுழி முனையை *சிவம்* எனவும்,
அதற்கு கீழ்பகுதி *லிங்கமெனவும்*
லிங்கம் உள்ள அடிப் பகுதி *ஆவுடையார்* எனவும்,
*சித்தர்கள் ஆராய்ந்து கூறினர்.*
அதாவது *கீழ் தாடை* மற்றும் *மேல் தாடை* ஆவுடையார் என்றும்.
தொண்டைக் குழியில் உள்ளே உள்ள *உள் நாக்கு* ஆவுடையாரில் பதிந்திருக்கும் *லிங்க பாகம்.*
*இதை வாய்க்குள் நம்மால் பார்க்க முடியும்.*
*அதே நாக்கானது மேல் நோக்கியும் அதே அளவு குவிந்திருக்கும்.*
அதுவே அன்னாக்கு. *(அண்ணாமலை)* நம்மால் வெளியில் அதைக் காண முடியாது.
அதைத்தான் லிங்கமாக *(மஹாதேவராக)* ஆவுடையாரின் மீது காண்கிறோம்.
அதன் மீதினிலிருந்து இயக்கும் சுத்த வெளியே *நெற்றிப்பொட்டினுள் காற்று* உள் செல்லும்,
மூக்கின் கடைசிபகுதியும் *தொண்டைக்குழிக்கு மேல்* சேரும் இடமே *சுத்த சிவம்.*
ஆகமமும் இதையே தெளிவுபடுத்துகிறது..
*சித்தர்களும் ஆராய்ந்து உருவாக்கியதே சிவன் உறையும் லிங்கத் திருமேனி..*
இதனாலேயேதான் *கருத்தையும், சிந்தையையும், தியானத்தையும் நெற்றிப்பொட்டு* எனப்படும் *சுழிமுனையில்* வை என சான்றோர்கள் கூறினர்.
*எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்*
*கண்ணாணார் அமுதினைக* *கண்டறிவாரில்லை*
*உண்ணாடிக்குள்ளே* *ஒளியுற நோக்கினால்*
*கண்ணாடிபோலக் கலந்து நின்றானே...*
*நாட்டமும் இரண்டும் நடு மூக்கினில் வைத்திடில்*
*வாட்டமும் இல்லை மனைக்கு அழிவில்லை*
*ஓட்டமும் இல்லை* *உணர்வில்லை தானில்லை*
*தேட்டமும் இல்லை சிவனவனாமே..*
- *திருமூலர்...*
*இனியேனும் லிங்கத் திருமேனியை அவதூறாகப் பேசாதீர்...*
*ஓம் நமசிவாய*





















No comments:
Post a Comment