*
ஞானிகளின் சிந்தனைகளை படிப்பதால் என்ன பெரிய மாற்றம் வாழ்க்கையில் வந்து விடப்போகிறது? என்று குரல் எழுப்பும் அன்பர்களுக்காக இந்த பதிவு,,,,*


*ஒரு அற்புதமான அனுபவபதிவு. ரங்கநாயகி அம்மாவிடமிருந்து whatsapp பகிர்வு*
*இனி ரங்கநாயகி அம்மா உங்களோடு உரையடுவார்,,,*
*...திடீரென்று என் கணவர் காலமானார். எனக்கும் வயது 60க்கு மேல்.*
*என் மகன் வேலை நிமித்தமாக பம்பாயில் இருப்பதால் என்னை அழைத்து செல்ல விருப்பமில்லாமல், என்னைHomeல் சேர்த்து விட்டார்கள்.*
*புது குழ்நிலை. ஏதோ என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டது போல் ஓர் ஏமாற்ற உணர்வு. ஜீரணிக்கவே முடியவில்லை. மனதளவில் செயலற்று போய் விட்டேன்.*
*Homeல் இருக்கும் லைப்ரரியில் புத்தகங்கள் சில இருந்தன. யதேச்சையாக எடுத்துப் பார்த்தேன். மனவளக்கலை part 1 and part 2 என்று இரு புத்தகங்கள் இருந்தன.*
*ஏதோ மனோதத்துவ புத்தகம் போல. நம் நிலைக்கு ஆறுதலாக இருக்குமே என்று படிக்க ஆரம்பித்தேன்.*
*பிறகு மெல்ல உணர முடிந்தது.வாழ்க்கையின் தாத்பரியம் புரிந்தது. மனமும் உறவுகளும் தெளிவாயின. வாழ்க்கையின் நோக்கம் உணர்ந்தேன்.*
*உயிர் தன்மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கு இந்த உடல் தேவை. நான் யார்? என்பதற்கு விடை கிடைத்தால் தெய்வநிலை அறியலாம். மெய்பொருளை உணரலாம். அருட்தந்தையின் இந்த ஞான வரிகள் என் மனநிலையை திசை மாற்றியது.*
*கவலை ஒழித்தல் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது.*
*இந்த பிறவியின் அற்புதம் புரிந்தது.*
*பாலைவனத்தில் வழி தெரியாது தவித்த என்னை யாரோ மீட்டது போல் இருந்தது. இலக்கு தெளிவானது. மனதளவில் போராட தெம்பு கிடைத்தது.*
*Homeல் உணவு சரியில்லை. நான் நன்றாக சமைப்பேன். Home நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு கிச்சனில் நுழைந்தேன்.*
*என் கைப்பக்குவம் எல்லோருக்கும் பிடித்தது. Home நிர்வாகி கூட அங்கேயே சாப்பிட ஆரம்பித்தார் என்னை எல்லோரும் விரும்ப ஆரம்பித்தார்கள்.*
*நிர்வாகம் சமையலுக்காக மாதம் எனக்கு சம்பளமும் கொடுத்தார்கள். வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.*
*இப்போது சுயமரியாதையோடு என் சொந்தக்காலில் நிற்கிறேன்.*
*பக்கத்திலே இருக்கும் மனவளக்கலை மன்றத்துக்கு சென்று பயிற்சியும் எடுத்தேன்.*
*Homeல் நம்பிக்கை இழந்து வாடுபவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறேன்.*
*இது நடந்து சில ஆண்டுகள் ஆகி விட்டது.*
*இப்பொழுது கூட்டுத்தவமும் செய்கிறோம்.*
*என் மகனையும் அவன் குடும்பத்தையும் வாழ்த்த ஆரம்பித்தவுடன், சில மாதங்களிலே அந்த உறவுகள் மீண்டும் என்னுடன் உறவாட ஆரம்பித்தன.*
*என் மகன் அனுப்பும் பணத்தை அவன் பெயரிலேயே பாங்கில் போட ஆரம்பித்தேன். பின்னால் அவனுக்கு உபயோகப்படட்டும் என்று.*
*சுதந்திரக் காற்றை சுவாசிப்பது சுகமானது. அதை விட சுகமானது நாம் வந்த நோக்கத்தை அறிந்து, அதனை நோக்கி பயணிப்பது.*










No comments:
Post a Comment