*
அகத்தியர் ஜீவநாடி பொது வாக்கு* :

*கேட்பது எளிது, சொல்வதும் எளிது, ஆயினும் சிரமங்களை அனுபவித்து கடந்தால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.*
*நன்றி ஏன் சொல்லுகிறோம்? அதன் தாத்பர்யம் என்ன?*
*நாவை அடக்கி (மடக்கி), ரீங்காரத்தை, உள்மேல் கபாலத்தை நோக்கி செலுத்தினால், அது இறைவனை சென்று சேரும். அதுவே நன்றியின் உண்மையான அர்த்தம்.*
*("நன்றி" என கூறி அந்த வார்த்தை கூறும் பொழுது, நாக்கு ரீங்காரத்தை அண்ணாக்குக்கு மேல் எப்படி ஒட்டிக்கொண்டு ரீங்காரத்தை செலுத்துகிறது என பாருங்கள்! வியந்து போவீர்கள். 99% பேருக்கும் இங்கு நன்றி சொல்லத் தெரியாதே. எவ்வளவு உணர்த்தி என்ன பிரயோசனம்).*
*விடியற்காலை எழுந்து, தியானம், பிராணாயாமம், போன்றவை செய்து, உடல் மனா சுத்தியுடன், முதலில் ஓதவேண்டியது இறைவன் நாமத்தையே! இறைவன் நாமத்தை ஓதிவிட்டு, மற்ற, செயல்கள் செய்தால், இறைவன் உன்னை கை விடமாட்டான்.*
*தெரியாததை, தெரியாது என்று கூறக் கூடாது. தெரிந்து கொண்டு பிறகு கூறுகிறேன் என்றுதான் கூற வேண்டும். அந்த முறையே சரி!*
*
மேற்காண்பவை..அகத்தியப் பெருமானை ஜீவநாடியில் உள்ள விவரமும் எனது எண்ணங்களின் பொதுவான விவரமும்...
*


கோகி Law










No comments:
Post a Comment