*
Meditation தியானம்
*


*
Lesson-16, பாடம்-16
*




*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்
*




*
அஷ்டமா சக்திக்கு புராணங்களில் இருந்து சில உண்மை கதை.. உதாரணங்கள்
*


*1.நெல்லையப்பர் காலடித் ஒரு நெல்லுமணி. எல்லாம் அவர் தந்தது.இந்த (குட்டிச்) சுவர் கழுதை ஒன்றும் அறியாது. இந்த ஏகாந்த நிலையடைந்த உள்ளம் நம்மை அதாவது நம் எண்ண ஓட்டத்தை அணுவிலும் சிறிதாக்கும். Physical body கூட அணுவளவில் மாறும். புலப்படா வண்ணம் இருக்கும் சித்த நிலை..*
*நம் உடம்பு அது சிகப்போ (செவ்வண்ணம்) கறுப்போ சிறு அணுத்துகள்கள் நெறுக்கி உருவம் கொண்டது.* *(யோகியின் சுய சரிதை நன்கு விளக்கும் " பாபா" பற்றிய கட்டுரைகளில்)*
*இதை அணிமா என்பர்...*
*2. என்ன பாட்டி நீங்க கர்ப்பகிரக பக்கம் காலை நீட்டி உட்கார்ந்து இருக்கீங்க. சாமி இருக்கிறது*
*சரியப்பா எந்த பக்கம் சாமி இல்லை ன்னு சொல்லு அந்தப் பக்கம் காலை நீட்ரேன்..*
*என்ற அவ்வையின் சொல் அகந்தை கொண்டதல்ல.*
*மலையளவு இறையுணர்வு வெளிப்பாடு.*,
*இதுதான் மிக மிக இன்றியமையாத சித்தி.*
*இந்த மலையளவு சித்திக்கு மஹிமா எனப் பெயர்.*
*3. அட நீ வேற. நான் காசில தீபாவளி கங்கா ஸ்நானம் பன்றப்ப அங்கே இருந்தாரு ஞானாநந்தகிரி சுவாமிகள். இங்கே திருக்கோவிலூர்ல பஜனைல ஆண்ணாமலையாரா இருந்தார் கிற. அது எப்படி? என் கண்ணால பார்த்தேன்*
*காற்றை விட இலகுவாக ஈர்ப்பு விசை தேவையற்ற நினைத்தால் காற்றை விட வேகமாக பறக்கும் ஆற்றல் கொண்ட சித்து*
*அதற்கு பெயரே இலஹிமா*
*4. வெள்ளைக்காரன் பொட்டி இது. இதுல பார் பிச்சைக்காரன் உட்கார்ந்து இருக்கான்.*
*வெள்ளைக்கார துறை மதுரை ஸ்டேஷன் ல காட்டு கத்து கத்தினார்.*
*நம்ம குழந்தையானந்த சுவாமி தான் அப்படி உட்கார்ந்து விட்டார். (மதுரையில் ஜீவ சமாதி கொண்டவர்)*
*இறக்கி பிளாட்பாரத்தில் அமர வைக்க கார்டு விசில் ஊத புகைவண்டி டிரைவர் லிவரைத் திருப்பி ஓட வைக்க....*
*ம்ஹூம். ஒரு இன்ச் கூட நகரல.*
*அப்பறமென்ன வெள்ளைக்காரன் அவன் வண்டில திருப்பி குழந்தையானந்தாவை அமர வைக்க ரெயில் மதராஸ் புறப்பட்டது.*
*இது மாதிரி மலையைக் கிள்ற சித்து வேலைக்கு பெயர் கரிமா.*
*5. வேண்டாம் வேண்டாம் னு ஏன் எதிர்மறையான பாடனும் என்று*
*அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் னு பாடிய வள்ளலார் மேலே கடலூர் கோர்ட்ல கேஸ்.*
*அது திருவருட்பா இல்ல. மருட்பா ன்னு சங்கதி ஓடி வெள்ளைககார நீதிபதி கடலூர் கோர்ட்ல வரச் சொல்லி ஆஜர் படுத்த...*
*அவரது சிஷ்யர்கள் கட்டாயப் படுத்தி கடலூர் கோர்ட் ல கூட்டி வந்து உள்ளே நுழைய...*
*எதிரணி கூட்டம் கூட எழுந்து நின்று வரவேற்க அதையே காரணம் காட்டி வெள்ளைக்காரன் கேஸை தள்ளுபடி செய்தான்.*
*எல்லோரையும் தன்வயப்படுத்துதல் என்று அந்த சித்தி காட்டும் தன்மை பிராப்தி என்பர்*
*6. இறந்து போன மூலனை சுற்றி சுற்றி வந்து கதறும் அவன் மேய்த்த மாடுகள் கண்டு மனமிரங்கி தனது உடலை ஓரிடம் வைத்து அந்த மூலன் உடல் புகுந்து மாடுகள் மகிழ்ந்து வீடுவரை விட்டு விதியால் தன்னுடல் எரிந்து நம் உள்ளங்களில் சுடர் விட்டெரியும் திருமூலம் தந்த திருமூலர் அந்த கூடு விட்டு கூடு பாயும் சித்தி கொண்டதும் அதனை...*
*பிராகாமியம் என்பதும் நாம் அறிவோம்.*
*7. நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே எப்படி நீ வந்து கடிச்சு விஷத்தை ஏத்தி உசிரை எடுத்தியோ*
*இப்போ என் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்து விஷத்தை உறிஞ்சி இந்த குழந்தை உசிரை கொடுக்கனும்.*
*ஆமா இந்த சிவனின் அடியார் கட்டளை*
*இந்த மாதிரி இயற்கை முரண்படும் ஆணை தரும் சித்தியின் பெயர் ஈசத்துவம்*
*8. வையத்து வாழ்வீர்கள். பையத் துயிலுரும் பரமணடி பார்க்க நோம்பு வைக்க வாங்கன்னு கூப்பிட்ட ஆண்டாள் இன்னிக்கும் நம்மல வசியம் பன்ற அந்த சித்திக்கு பெயர் வசித்துவம்*
*
மேற்கண்ட மேலும் பல உதாரணங்கள் விவரங்களை சித்த வித்தை பயிற்சியில் நாம் உணரமுடியும்.*

*
பயிற்சி உதாரணம்:-*

*
உதாரணம்:- ஆடியோ, வீடியோ இணைப்பில் காண்க..*



*அனைவரிடமும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும்... வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி















No comments:
Post a Comment