*
சித்த வித்தை – 
:-*



*”...நமக்குள் இருக்கும் பிரம்மாந்திரத்தை தட்டித் திறந்து , ஆன்ம தரிசனம் செய்வது தான் சித்த வித்தை ஆகும்*
*கபால மோட்சம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. இதைப்பற்றி தெரிந்துகொள்வதால் என்னபயன்?*
*இதைப்பற்றி நான் உங்களுக்கு எடுத்து சொல்ல எனக்கு கிடைத்த அனுபவம்.. "காசி.. சாவித்திரி காட்.." இறந்த ஸ்தூல உடல்களை எரிக்கும் சுடுகாடு.. ஆனால் எல்லா சுடுகாட்டிலும் இந்த அனுபவத்தை பெறமுடியாது...*
*தச வாயுக்களை பற்றி Lesson/ பாடம் -6 இல் ஏற்கனவே கூறியிருக்கிறேன்..*
மகா *சித்த* நாதர்.
ஶ்ரீ *திருமூலர் கூற்றில்* உடலின்
*10 வித காற்றும்-செயலும் என்பதை ஏற்கனவே பயிற்சி பாடங்களில் குறிப்பிட்டுள்ளது நினைவு கூறுகிறேன்..*:
*“இருக்கும் தஞ்சயன் ஒன்பது காலில்;*
*இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்;*
*இருக்கும் உடலில் இருத்தல் ஆகில்;*
*இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.” (தி.ம 654)*
*பொருள்:*
*************
*தனஞ்சயன் (வீங்கற் காற்று)* என்னும் வாயு இயக்கும்
மற்ற 9 வாயுக்கள் (உயிர் காற்று (பிராணன்),
மலக்காற்று (அபானன்), தொழில் காற்று.
(வியானன்), ஒலிக்காற்று (உதானன்),
நிரவுக்காற்று( சமானன்), தும்மல் காற்று
(நாகன்), விழிக்காற்று (கூர்மன்), கொட்டாவிக்
காற்று (கிருகரன்), இமைக் காற்று
(தேவதத்தன்)) போன்றவை நமது உடலோடு கலந்தே இருக்கும். அஃது
223ஆவது புவணமான அகந்தை என்ற
மண்டலத்தில் பொருந்தியிருக்கும். இந்த தச வாயு
இல்லாது போனால் உடல் வீங்கி வெடித்து
போகும்.*
*ஒரு மனிதன் இறந்த மூன்றாவது நாளில், அல்லது எரியூட்டும் வேளையில் தனஞ்சயன் வாயு தலை வழியாக வெளியேறும். இது தான் கபால மோட்சத்தின் இறுதி நிலை. இதன் காரணத்தினாலே இறந்து பல காலநேரம் ஆண மனிதனின் உடல் உப்பத் தொடங்குகிறது.*
*(தசவாயுக்கள் வீங்கற் காற்று.) ( தனசெயன்)*
*10 வாது நாடி வாயுவான "தனஞ் செயன்" :- ஒன்பது வாயுக்களிலும் பரவியிருந்து விரவிக் கொண்டு நொடிக்கு 224 அதிர்வு அலைகளை உண்டாக்கி ஒவ்வொரு வாயுவையும் அதனதன் தொழிலை செய்யவைப்ப தோடு 72,000 நாடி நரம்புகளையும் இயக்குவது, கர்ப்ப காலத்தில் இவ்வாயு குறையுமானால் பிறக்கும் குழந்தை கூன், குருடு, செவிடு, பேடு, முடம் மற்றும் தொழுநோய்- இவைகளை ஏற்படுத்தும். கர்பத்திலுள்ள கருவை வெளியே தள்ளுவதும் இவ்வாயுவின் பணியே. மனிதன் இறக்கும் போது ஒன்று முதல் ஒன்பது வாயுவும் ஒன்றன்பின் ஒன்றாக உடல் விட்டு வெளியேறும். ஆனால் தனஞ்செயன் மட்டும் உடலில் தங்கி இருந்து வினாடிக்கு 224 மின் அதிர்வை சிறிது சிறிதாக குறைந்துகொண்டே வந்தது இறுதியில் தலை மூளை பகுதியிலிருந்து பெரிய சத்தத்துடன் வெளியேறும்.. இதைத்தான் கபால மோட்சம் என்பார்கள்.. இதை அனுபவத்தில் பார்க்க வேண்டுமானால் காசியில், சாவித்திரி காட், மயானத்தில் அனுபவமுள்ள அகோரிகள் செய்து காட்டும் அற்புதம் இது..*
*..இதை நாம் தெரிந்துகொள்வது நமக்கு என்ன பயன்?.. "உடல் இரண்டு துண்டான போதும். தனசெயன் என்கிற வீங்கற் காற்றை கட்டுப்படுத்தி. பிராண உயிர் மூச்சு நிற்காமல் காத்துக்கொள்ளும் அபரிவிதமான சக்தியை வசப்படுத்தி மரணத்தை வெல்லமுடியும்" என்று சித்தர்பெருமான் கூறுகிறார்... அதுமட்டுமில்லாமல் மரணமில்லா பெருவாழ்வு உடலுக்கு தரமுடியும் என்றும் கூறுகிறார்...*
*அப்படியென்றால்.. நமது உடல் உறுப்புகள் செயல் இழக்காமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளமுடியுமா?.... என்னுடைய தேடுதல்கள் தொடர்கிறது... விடை கிடைக்கும் என நம்புகிறேன்...*
*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி
*














No comments:
Post a Comment