*
ஆனா பானா சதி
*


*1.இது புத்தர் பெருமான் அருளிய மூச்சுப்பயிற்சி.*
*2.பாலி மொழியில் ஆனா என்றால் உள்மூச்சு என்று பொருள்*
*3.அபானா என்றால் வெளிமூச்சு என்று பொருள். சதி என்றால் உன்னிப்புடன் கவனித்தல் என்று பொருள்*
*4.அதாவது ஆனாபானா சதி என்பது உள்மூச்சையும் வெளிமூச்சையும் மன ஒருமையுடன் கவனித்தலே*
*5.இப்பயிற்சி மற்ற மூச்சுபயிற்சிகள் போன்று செயற்கையாக நெறிப்படுத்து பயிற்சி அல்ல*
*6.இயற்கையாக நடைபெற்று கொண்டிருக்கும் உள்மூச்சையும் வெளிமூச்சையும் கவனித்தலாகும்.*
*7.மனம் என்ற யானையை அடக்க ஒடுக்க இப்பயிற்சி அங்குசமாக பயன்படும்.*
*8.மூச்சு விடுதல் அனைத்து உயிர்களும் இடையறாது செய்யும் செயல்*
*9. மூச்சு விடுதல் என்பது ஒரு இயற்கையான விசயமாகும்*
*10.புத்தர் இந்த இயற்கை செயலையே ஒரு தியான கருவியாக பயன்படுத்தி கொள்ள எளிய வழியாக கூறியுள்ளார்*.
*இப்படி நம்மை நாம் உள் நோக்கி கவனிக்கும்போது அளப்பரிய ஆத்ம ஆற்றல் பிறக்கிறது.. அது நமக்கு ஏராளமான சக்தியை தருகிறது..*
*
கோப்புக் குறிப்புகளில் இருந்து.. கோகி*













No comments:
Post a Comment