T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: எதை மறக்க வேண்டும்.. எதை மறக்க கூடாது?

Thursday, August 24, 2023

எதை மறக்க வேண்டும்.. எதை மறக்க கூடாது?

  📚🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️📚


*📚எதை மறக்க வேண்டும்.. எதை மறக்க கூடாது?*📚

*சீன சுவாங் ட்ஸு என்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன மேதை. ஜென் மாஸ்டர்.*

*ஒருமுறை அவருடைய சிஷ்யர் ஒருவர் கேட்டார்,* 

*‘குருவே, நீங்கள் எத்தனையோ பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுடைய மனத்தைக் கவர்ந்தவர் யார்?’*

*சீன சுவாங் ட்ஸு சிரித்தார்.*

*‘என்னுடைய மனத்தைக் கவர்ந்த அந்த மனிதரை நான் இன்னும் சந்திக்கவில்லை.’*

*‘அப்படியா? யார் அவர்?’‘வார்த்தைகளை மறந்த ஒருவர்!’ ‘புரியவில்லையே!’*

*சீன சுவாங் ட்ஸு விளக்கத் தொடங்கினார்.*

*‘நீங்கள் வலை வீசி மீன் பிடிக்கிறீர்கள். மீன் கிடைத்தவுடன் வலையை என்ன செய்வீர்கள்?’*

*’தூர வீசிவிடுவோம்!’*

*’ஆக, வலை தூர வீசப்படும்வரை, உங்களுக்கு மீன் இன்னும் கிடைக்கவில்லை என்று அர்த்தம். இல்லையா?’*

*‘ஆமாம் குருவே!’*

*‘அதேபோல், முயலைப் பொறி வைத்துப் பிடிக்கிறோம். முயல் கிடைத்தவுடன் பொறியைத் தூர வீசிவிடுகிறோம். இல்லையா?’*

*’உண்மைதான். அதற்கென்ன?’*

*’வலை, பொறிபோலதான் நாம் பேசும் வார்த்தைகளும். அவை உயர்ந்த கருத்துகளைக் கொண்டுசெல்லும் வாகனங்கள். நாம் அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன், வார்த்தைகள் மறந்துபோகும்’ என்றார் சுவாங் ட்ஸு. ‘ஆனால் நான் சந்தித்த எவரும் வார்த்தைகளை இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து அவற்றோடுதான் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் உலகப் பேருண்மைகளை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?’*📚

பகிர்வு - கோகி 
📚🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️📚

No comments:

Post a Comment