T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-5, பாடம்-5 ஓங்காரமும் ரீங்காரமும்

Wednesday, August 23, 2023

Lesson-5, பாடம்-5 ஓங்காரமும் ரீங்காரமும்

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-5, பாடம்-5👃📚*

*🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே தியான யோகம்🧘‍♂️🧘‍♀️*

*🕉️ஓங்காரமும் ரீங்காரமும்🔔*

*🔔மணி,* 
*📿மந்திரம்,* 
*🧘‍♀️தியானம்🔔*
*இந்த பயிற்சி வகுப்பில் ஒரு மணியின் ஒசையினால் எழும் நாதம் படிப்படியாக குறைந்து இறுதியில் தேய்ந்து போவதைப்போல..  ஓம் என்கிற ஓங்கார மந்திரத்தை மணி ஓசையின் ரீங்கார் இசையோடு எடுத்து செல்வதையும் அந்த  பயிற்சியோடு நமது மனதை பயணிக்கச்செய்து தியானிக்கும் முறையை செய்து பழகினால்... நமது மனம் அங்கும் இங்கும் அலைபாயாமல் ஒருநிலைபடும்..*

*இப்படி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். தியானம் சித்திக்கும்...*

*இதனை வாசிப்பவர்களுக்கு விட்டகுறை வாய்த்தால் சித்தர் பெருமக்களே குருவாய் வந்து, கலியுகக் கண்ணனாய் அருள் புரிந்து, ஆசி வழங்கிடுவர். அதற்கான வாழ்த்துக்கள் !*

*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி  ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


*💐Meditation தியானம்💐*
*📚👃Lesson-5, பாடம்-5👃📚*

*🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே தியான யோகம்🧘‍♂️🧘‍♀️*

*📚வேத சூத்திரம்-32 (அகார, உகார, மகார)*📚

*🕉️ஓங்காரமும் ரீங்காரமும்🔔*

*உலகில் உள்ள அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகட்கும் ஆதார வித்தாய், அகண்ட ஞானமாய், சிந்தனைக்கு உணவாய், செயலுக்கு விளக்கமாய் இருந்து, உலகினை ஆட்கொண்டு ஆட்சி செய்வது ஒலி, ஒளிவடிவான இரு சக்திகளே ! சித்தர் பெருமக்கள் இவ்விரு சக்திகளை அகரம், உகரமாய் தொழுது வணங்கினார்கள்.“ மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே “  எனும் திருமந்திரப் பாடலைக் காண்க.*

*`ஓம்` என நிற்பினும் ஓரெழுத்தேயாம். `மந்திரம்` என்பது ஓரெழுத்தாலாய மந்திரத்திற்கே சிறப்பாக உரிய பெயராதல் என மந்திர நூல்களால் அறியப்படுவது.*

*பிரணவம் என்ற ஓங்காரம் ஒளிர்ந்தது. ஓம் என்பதைப் பிரித்தால் அ+உ+ம் (அகார,உகார, மகார வரிசையிலே அடங்குபவை) என்று வெளிப்படும். அது படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது*
  
*அகார வரிசையிலே அடங்குபவை :- தூல உடம்பு, பரு உடம்பு, பெண், ரிக் வேதம், பல்லவி, பாதம், புத்தி, ரஜோ குணம், சிவப்பு, பூரகம், நாதம், கிரியா சக்தி, பிராம்மணி, பிரம்மா,  கடந்த காலம்...*

*உகார  வரிசையிலே அடங்குபவை :- சூட்சும உடல், நுண்ணுடல், ஆண், யஜுர் வேதம், தீர்க்கம், அனுபல்லவி, நாபி,மனம், தமோ, கபிலம், கும்பகம், பிந்து, சக்தி, வைணவி, விஷ்ணு, நிகழ் காலம்.*

*மகார வரிசையிலே அடங்குபவை :- காரண உடல் என்கிற லிங்க உடல், அலி, சாமவேதம், சரணம்,சிரசு,அகங்காரம்,சத்வம், ரேசகம், காலை, கருப்பு, ஞான சக்தி, ருத்ரன், எதிர்காலம்*

*இவ்வாறாக இன்னும் அநேகம் இந்த படைப்புலகில் ஓம் என்ற சப்தம் உருவம் ஒலியில் யாவும் கலந்து நிற்கின்றன.*
  
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment