T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-11, பாடம்-11 அடிப்படை சித்தவித்தை

Thursday, August 24, 2023

Lesson-11, பாடம்-11 அடிப்படை சித்தவித்தை

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐
*📚👃Lesson-11, பாடம்-11👃📚*

*🧘‍♂️அடிப்படை சித்தவித்தை🧘‍♂️*

*📚சுழிமுனை இரகசியத்தை எப்படி பயன்படுத்துவது📚*

*பொதுவாகவே.. அனைவரும்.. பிரபஞ்சத்திடம் தங்களின் தேவைகளை கேட்டு பெறுவதை, யாரோ ஒருவர் மாயாஜாலம் செய்ததைப்போல நமது கைகளில் கொண்டு வந்து தருவார்கள் என்கிற எதிர்பார்ப்பில்தான் ஈர்ப்பு விதி, மற்றும் தியான பயிற்சியை செய்ய முன்வருகிறார்கள்.. பிறகு அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் ஏமாற்றமடைகிறார்கள்..*

*பயிற்சியின் வழிமுறை சரியாக தெரியாததால் விட்டில் பூச்சியாக பலரும் சொல்லும் வழிகளை பின்பற்றி பிறகு 99% முயற்சியில் தோல்வி என்கிற நிலையில் முயற்சியை விட்டு விடுகிறார்கள்..*

*அப்படியென்றால் சரியான எளிமையான வழிதான் என்ன?*  

*புது தில்லியில் சுட்டீஸ் சிறுவர்களுக்கு தரும் பயிற்சியை தான் உங்களுக்கும் வழங்குகிறேன்.. எனது அனுபவத்தில் பெரியவர்களை விட சிறுவர்கள் மிக சிறப்பாக பயிற்சியை பயன்படுத்துகிறார்கள்.. எனக்கே வியப்பை தருமளவில் பல செயல்களை செய்து காட்டுகிறார்கள்.... அவர்களின் முயற்சி தரும் உற்சாகம்தான் என்னை தொடர்ந்து இந்த பயிற்சியை சொல்லித்தர விருப்பமூட்டுகிறது...*

*📿🧘‍♂️🧘‍♀️பயிற்சி முழுவதும். எனக்கு பயிற்சியளித்த ஆசிரம குருமார்களின் வழிகாட்டுதலையும், (அன்னை அரவிந்தர் ஆசிரமம், மற்றும் உத்திராகண்ட் கைலாஷ் ஆஸ்ரமம், ஜக்கி வாசுதேவ் அவர்களின் நேரடி பயிற்சியில்  ஈஷா பயிற்சி மையம், மற்றும் பதாஞ்சலி யோகாஸ்ரமம்,  ஜோகூர் மலேசியா ஆசிரமம், சிங்கப்பூர் சூடோ சைனீஸ் ஆசிரமம், மற்றும் வேதாந்த மகரிஷி ஆசிரமம், பகாய் சமய அமைதி தியான பயிற்சி) போன்ற பல ஆசிரமங்களில் பெற்ற பயிற்சியையும், எனது சொந்த அனுபவத்தையும் மையமாக வைத்து இந்த பயிற்சி முறைகள் இளம் சிறுவர்களுக்கு சொல்லிக்கொடுத்த முறைகளைத்தான் இங்கு இந்த பயிற்சியில் பதிவிடுகிறேன்... இப்படிக்கு கோகி- ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து...*

*📚சுழிமுனை சுவாச விழிப்புணர்வு📚

*📚சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்📚*

*👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*👃📚

*மேற்சொன்னவைகளை கருத்தில் கொண்டு நமக்கு பழக்கமாகிவிட்ட மூச்சு பயிற்சியையும்,தியானத்தையும் செய்யும் முறையை கீழ்கண்ட ஆடியோவில் கூறியிருக்கிறேன்..*.

*"கோரக்கர் சந்திரரேகை" என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,  மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர கலையிலும் மாற்றி மாற்றி இழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கைகால்களை ஆட்டாமல் கை வைக்காமல் மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது , அவ்வாறு செய்யும் முறை உண்டா?*

*இன்றய பயிற்சியில் அதற்கான விளக்கம் கூறியிருக்கிறேன்..*

*முந்தைய வகுப்பு பயிற்சியின் தொடர்ச்சி:-*😷🔔🔔🔔🔔
××××××
*5)இப்போது நீங்கள் உங்களின் சுழிமுனை ரகசியத்தை பயன்படுத்தவேண்டும்... அது உங்களை வழி நடத்தும்.. உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அறிவாற்றலை தரும்... அது எப்படியிருக்கும் என்பதை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்...*

*சுழுமுனை என்பதை இரண்டு வெவ்வேறு நிலைகளில் கூட்டாக உருவாகும் "விம்மல்கள்" போன்றது.. யோக சக்தியால் உயிர் மூச்சை புருவ மத்தியில் நிறுத்தி செய்வதும்.. அங்கிருந்து உண்ணாக்கு என்கிற நாக்கின் மேல்பகுதியில் உள்ள நாசித்துவாரம் வரை உள்ள இடைப்பகுதிவரையில்.. நுரையீரல் சுவாசத்தை கட்டுப்படுத்தி நாடி சுவாசத்தை பழகுவது.. நாடிகளின் வழியே மூச்சுக்காற்றை நிறுத்தி கபாலத்தில் ஏற்றுவது... (புரியும்படி சொன்னால்.. கோட்டுவாய் என்கிற மூச்சுக்காற்றை தலை மூலைப்பகுதியிலிருக்கும் நரம்புமண்டலத்திர்க்குள் செலுத்துவது.. அதாவது தலைப்பகுதியில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குக்கு பிராணசக்தி குறையும்போது.. நமக்கு தூக்கக் கலக்கத்திர்க்கு உண்டான கோட்டுவாய் வந்து மூக்கு மற்றும் வாய்வழியாக அதிக காற்றை பிராணசக்தியை மூளை நரம்புகளுக்கு செலுத்துவது...) இந்த உதாரணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்..*

*உண்னாக்கு மேல் பகுதியின் நாசி துவாரங்களை நமது நாக்கை மடித்து அந்த நாசி துவாரத்தை அடைத்து பிராணசக்தியை மூளை நரம்புகளுக்கு செலுத்துவது..... இன்னும் இது போன்ற மேலும் பல விவரம் அடுத்த வகுப்பில்...)*

*இறுதியாக #பகவத்_கீதை ஸ்லோகம் கூறி இந்த பதிவை நிறைவு செய்வோம். “எவனொருவன் இறக்கும் நேரத்தில் தன் யோக சக்தியால் உயிர் மூச்சை புருவ மத்தியில் நிறுத்தி உடலை விடுகிறானோ அவன் இறைவனின் புனிதமான ஆன்மீக உலகை அடைகிறான்” -அத்தியாயம்8 ,ஸ்லோகம் 10.*

*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*❌குறிப்பு:- சுவாசம் பற்றி நன்கு உணர்ந்த நாம், அதை சரியாக பின்பற்றுவதில்லை.❌*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment