T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: இந்த பிராணிகள் ஞானிகளே !

Thursday, August 24, 2023

இந்த பிராணிகள் ஞானிகளே !

  🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

*உயிர் மூச்சை அடக்கி வாசியில் வாழும் விலங்குகளும் பறவைகளும் ஒரு அதிசயம்.. அவைகளுக்கு தெரிந்தது கூட மனிதருக்கு தெரியாத.. அல்லது முயற்சி செய்யாத மனிதன்...*

*🧘‍♂️மனித மிருக வர்ணனை🧘‍♀️

*மிருகங்கள் என்று சொல்லி வருபவை கட்கு அனுசரணை சக்தி அதாவது சொன்னபடி கேட்கும் பண்பு உண்டு.* 

*எனவே அவை விசேஷ ஞானிகளாகும்.*

*மனிதன் இத்தனை காலங்களாக மிருகங்களோடு பழகியும், அவற்றின் மொழிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.*

*ஆனால் அவை மனிதனுடைய மொழியை எவ்வளவோ இலகுவாக புரிந்து கொள்ளவும் அதை அனுசரித்து நடக்கவும் செய்கின்றன.*

*அதற்குள்ள புத்தி மிருகங்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல,*

*கோடை காலத்தில் குளங்களில் தண்ணீர் வற்றும் போது மீன்கள் மண்ணின் அடியில் தலை கீழாகத் தாழ்ந்து போகின்றன.* 

*முடிவில் தண்ணீர் சிறிதும் இல்லாமல் போகும் போது சிரசில் உயிரை ஒடுக்கிக் கொண்டு இருக்கின்றன. பார்வைக்கு சவம் போல் தென்படுகின்றன.* 

*ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு எப்போதாவது மழை பெய்து தண்ணீர் வந்தால் அவை மேலே வந்து துள்ளி விளையாடுவதை காணலாம்.* 

*அதுபோலவே பூமிக்கடியில் கிணறுகள் எவையேனும் தோண்டும் போது, நாலு பக்கமும் மண் கொண்டு நெருங்கி இருக்கும் ஒரு சிறு வெளியில், ஒரு தவளை இருப்பதை காணலாம்.* 

*காற்றும் தண்ணீரும் ஆகாரமும் கிடைக்காத அந்த இடத்தில் இந்தப் பிராணி எப்படி வாழ்கிறது ?* 

*யோகிகள் மண்ணுக் கடியில் வெகு நாள் இருக்கிற கதைகளையும் செய்திகளையும் கேட்டதுண்டு அல்லவா !* 

*இப்பிராணிகளும் அதுபோல தவம் செய்கிறவர்களே !* 

*சகல படைப்புகளிலும் மேலானவர்கள் என்றும் புத்தி உள்ளவர்கள் என்றும் அபிமானித்து வருகிற மனித மிருகங்கள் , இந்தப் பிராணிகளை விட எவ்வளவோ கீழ் நிலைமை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.* 

*இந்த பிராணிகள் ஞானிகளே !* 

*ஜெகத்ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்ஸரின் தத்துவ சொற்பொழிவுச் சுருக்கம்.*
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

No comments:

Post a Comment