T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: குரு தத்துவம்

Thursday, August 24, 2023

குரு தத்துவம்

 📚📚📚📚📚📚📚📚📚📚

*ஜெகத் ஜோதி  சுவாமி சிவானந்த பரமஹம்சர் திருவாய் மலர்ந்தருளியது.*

*🌼குரு தத்துவம் 🌼

*காரண குரு, காரிய குரு என இரண்டு குரு எல்லோருக்கும் உண்டு.* 

*உலகம் என்பது காண்பதற்கும் , கேட்பதற்கும் , அறிவதற்கும் உள்ள மூன்று நிலைமைகளோடு உள்ளது; அதனால் உலகம் காரிய குருவாகிறது.* 

*காண்பதற்கும் , கேட்பதற்கும், அறிவதற்கும் காரணமாயிருப்பது மனம் ஆனதால் அம்மனமே காரண குருவாகிறது.* 

*மனமாயிருக்கின்ற குருவே பந்தத்திற்கும் - மோட்சத்திற்கும் காரணம் ஆகிறது.* 

*மனமாயிருக்கின்ற குருவே பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணம் ஆகிறது.* 

*மனமாயிருக்கின்ற குருவின் ஸ்தானம் இருதயத்தில் ஆகும்.*

*மனத்தினுடைய உற்பத்தி ஜீவனிலிருந்தாகும்.* 
*உப்பானது தண்ணீரில் இருந்து உண்டாகி பின் அதிலேயே  லயப்படுவது போல் மனமானது ஜீவனிலிருந்து  உண்டாகி , பின் ஜீவனிலேயே  லயப்பட்டு ஜீவன் மட்டுமாகிறது.*

*அதனால் தான் தூங்கும் போது நம்மால் காணவே , கேட்கவோ , அறியவோ  முடிவதில்லை.* 

*மனத்தினுடைய ஸ்தானம் இருதயத்தில் ஆகும். அந்த இருதயம் பிரகாச வஸ்துவாகும்.* 

*மனமாகிய குருவினுடைய ஸ்தானமான இருதயம் ஆகாயத்தில் ஆகும்.* 

*ஆகாயத்தின் ஸ்தானம் சிரசிலாகும்.*

*சிரசின் மத்தியில் இருதயம் இருக்கிறது.* 

*நூல்: உலக சாந்திக்குள்ள ஜீவிதம்.*

 📚📚📚📚📚📚📚📚📚📚



No comments:

Post a Comment