T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: விளக்கிற்கு ஒளி எங்கிருந்து வந்தது?

Thursday, August 24, 2023

விளக்கிற்கு ஒளி எங்கிருந்து வந்தது?

 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🧘‍♂️

*ஒரு எதார்த்த எளிமை ஞானி ஒரு ஊரில் சென்று கொண்டிருந்தார். அது ஒரு மாலை வேளை.*

*ஒரு குழந்தை🪔 விளக்கோடு கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த ஞானி அந்தக் குழந்தையை நிறுத்திக் கேட்டார்.*

*"இந்த🪔 விளக்கிற்கு ஒளி எங்கிருந்து வந்தது? நீதானே விளக்கேற்றினாய்?"*

*குழந்தை பதிலளித்தது. "நான்தான் விளக்கேற்றினேன். ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியாது.!"*

*பின் குழந்தை விளக்கை ஊதி அனைத்தது : "உங்கள் முன்னரே ஒளி மறைந்து விட்டது பாருங்கள்." என்றது, "இப்பொழுது சொல்லுங்கள், ஒளி சென்றது எங்கே? உங்கள் முன்பாகத்தானே சென்றது? சொல்லுங்கள் அது எங்கிருந்து வந்தது என்பதை நான் அது எங்கு சென்றது என்று சொல்கிறேன்." என்று அக்குழந்தை கூறியதும் அதன் காலில் விழுந்தார்.*🙏

*ஞானி இனி அத்தகைய கேள்வியே கேட்பதில்லை என உறுதியளித்தார்.தான் பதிலளிக்க முடியாத கேள்வி கேட்பது முட்டாள்தனம்.*

*அக்குழந்தையிடம் மன்னிப்பு கேட்டு, ஒளி சென்ற இடம் தனக்குத் தெரியாது என்றார்.*

*பின் அவர் கூறினார். "விளக்கை விடு. எனக்கு நல்லதே நினைவுபடுத்தினாய். என் விளக்கில் (உடல்) ஒளி வருவது எங்கிருந்து என்று எனக்குத் தெரியாது. அது எங்கு மறையும் என்பதும் தெரியாது. என் விளக்கைப் பற்றி முதலில் நான் விசாரிக்கிறேன். பின் இந்த மண்விளக்கைத் தேடுகிறேன்."*

*இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் "ஆன்மா விழிப்புணர்வு" அடைவதற்கான ஒன்றை அறிந்து கொண்டார்.*
📚🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️📚

No comments:

Post a Comment