T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்.

Thursday, August 24, 2023

குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்.

  😂📚📚📚📚📚📚📚📚📚📚


*சிரிக்க கொஞ்சம்... சிந்திக்க கொஞ்சம்....*

போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...

*முதல் நாள் :*

*எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..*

*நம்ம உடம்பை Control பண்றதை விட.,*
*மனசை Control பண்றது கஷ்டம்..*

*ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது, வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..*
*விரதம் இருக்கும் போதுதான் சாப்பாட்டை பற்றி நினைக்கும்..*

*இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..*

*நீங்க ஒரு காரை Start பண்றீங்க.. ஆனா அந்த கார்...*

*Right-ல திருப்பினா - Left-ல போகுது.,*
*Left-ல திருப்பினா - Right-ல போகுது.,*
*Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,*
*பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,*
*அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..*

*மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,*

*காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..*

*அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..*

*ஆனா எங்க குருவோ..,*

*" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "*

*அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..*

*அப்ப  பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர்  அப்படியே ஷாக் ஆயிட்டார்..*

*அப்ப குரு பார்த்துட்டார்..*

*என்ன கேட்டேனா.. ?*

*" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?*
*நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "*

 *இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது  எப்படின்னு பயிற்சி நடக்குது .,😜*😂
📚📚📚📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment