T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *எங்கே இருக்கிறது மன அமைதி..?*

Thursday, August 24, 2023

*எங்கே இருக்கிறது மன அமைதி..?*

📚எங்கே இருக்கிறது மன அமைதி..?*

 
ஒரு காபி கடையின் உரிமையாளர் அன்றைய நாள் முழுவதும் பிஸியாக இருந்தார்.  அன்று சனிக்கிழமை என்பதால், அவருடைய கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது, வாடிக்கையாளர்கள் அதிகமாக காணப்பட்டனர்.

காலையிலிருந்தே அவர் அதிக வேலைகளில் இயங்கி கொண்டிருந்தார். மாலையில் அவருக்கு தலைவலிப்பது போல் உணர்ந்தார்.

நேரம் போக போக, அவரது தலைவலி மோசமாகியது.

மேலும் பொறுக்க முடியாமல், தனது ஊழியரை விற்பனையை கவனிக்க வைத்து விட்டு கடையை விட்டு வெளியே வந்தார்.

தலைவலியைப் போக்க வலிநிவாரணி மாத்திரை வாங்குவதற்காக அவர் அத்தெருவில் இருந்த  மருந்தகத்திற்கு சென்றார்.

மாத்திரையை வாங்கி விழுங்கி நிம்மதி அடைந்தார்.  இன்னும் சில நிமிடங்களில் அவரின் தலைவலி முற்றிலும் குறைந்து நலமடைந்து விடுவார் என்று அவருக்குத் தோன்றியது.

மருந்துக்கடையை விட்டு வெளியே செல்லும் போது, எதார்த்தமாக விற்பனைப் பெண்ணிடம், "உங்கள் மருத்துக்கடையின் உரிமையாளர் எங்கே?  அவர் இன்று கேஷ் கவுண்டரில் இல்லையே?" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், "ஐயா, அவருக்கு தலைவலி வந்து மிகவும் அவஸ்தைபட்டார். அவருடைய தலைவலியை போக்க உங்கள் காபி கடைக்கு சென்றிருக்கிறார். உங்கள் கடை ஒரு கப் சூடான காபியை குடித்தால் தான் அவருக்கு தலைவலி தீரும்"  என்று கூறினார்.

அந்த காபி கடை உரிமையாளர்  வாயடைத்து நின்றார்.

நம்மிடம் இருக்கும் ஒன்றை நாமே வெளியில் தேடுகிறோம். இது எவ்வளவு விசித்திரமானது, ஆனால் இதுதான் உண்மை.

மருந்து கடைக்காரர் காபி குடிப்பதன் மூலம் தலைவலியை நீக்குகிறார், அதே வேளையில் காபி கடைக்காரர் மாத்திரை சாப்பிட்டு தலைவலியை போக்குகிறார்.

இதேபோல், நம்மில் பலர் மன அமைதியை தேடி பூமியில் எங்கெங்கோ அலைகிறோம்.

இறுதியில், அமைதியானது நம் இதயத்திலும் மனதிலும் எல்லா நேரங்களிலும் நமக்குள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

*மன அமைதி என்பது நம்மில் திருப்தியடைவதன் மூலமும், நம்மிடம் இருப்பதைக் குறித்து நன்றியுடன் இருப்பதன் மூலமும் கிடைக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.*

 *🌹🌹🌹🔥*அன்புடன் *🌹🌹🌹*

No comments:

Post a Comment