T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *குரு* வும் *துடைப்பமும்*📚

Thursday, August 24, 2023

*குரு* வும் *துடைப்பமும்*📚

  🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

*📚வழி* காட்டும்
 *குரு* வும் *துடைப்பமும்*📚

*ஒரு முறை இராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம்  ... சீடர் ஒருவர் கேட்டார் ...*

*“ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த #புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது.....???”*

*“ஒரு மாணவன்/அறிவைப் பெறவிருப்பவன்..*

*தன் எதிரிலுள்ள குருவையோ ஆசானையோ பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர்...*

*“குருவே தப்பும் தவறுமாக செய்தால் ... இருந்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து...???” என்று  கேட்டார் சீடர்...*

 *பரமஹம்ஸர்* முகத்தில் புன்னகை ... அழுக்குத் துடைப்பம்தானே ... அறையைச் *சுத்தம்* *செய்கிறது* ....???”

*சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை...*

துடைப்பம் *அழுக்காக* ... *இருந்தாலும்* அது தேவையான இடத்தை *சுத்தம்* *செய்கிறது* ... 

அறை *சுத்தமாக* இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ... *துடைப்பம்* அழுக்காக இருக்கிறதே எனக் *கவலை* ப் படுவதில் அர்த்த *மேதுமில்லை* ...

ஒரு சிஷ்யனின் # *மனநிலை* 
இப்படி இருக்க வேண்டும்... 

*குருவின்/ஆசானின்/அறிந்தோனின் 'சொற்பதங்களும்' வழிகாட்டும் 'நுட்பங்களும்' தனக்குப் பயன்படுமா .?!.. என்பதைத்தான் பார்க்க வேண்டும்*..!!!. 

*குருவின் தகுதியைப் பார்க்க* வேண்டியதும், *ஆராய்ந்து* .. ஆய்வறிக்கை சமர்பிக்கும் பொறுப்பும் *அவனுக்கு இல்லை*...

*மெய்யறிவை தேடுதலுள்ளவன் தேடும் பொருளை Content மட்டுமே கைப்பற்ற முனைதல் வேண்டும்.*

*அதை சுமக்கும்/வைத்திருக்கும் பாத்திரத்தை அல்ல என்ற புரிதலில் தெளிவுற்றிருக்க வேண்டும்.*
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

No comments:

Post a Comment