T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *பிராணயாமத்தின் பலன்கள்:-* ப்ராணாயாமம், மூச்சு பயிற்சி செய்யும் முறை (Methods)*

Thursday, August 24, 2023

*பிராணயாமத்தின் பலன்கள்:-* ப்ராணாயாமம், மூச்சு பயிற்சி செய்யும் முறை (Methods)*

🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

*பிராணயாமத்தின் பலன்கள்:-* ப்ராணாயாமம், மூச்சு பயிற்சி செய்யும் முறை (Methods)*


*மனஅழுத்தம் நீங்குகிறது. உடல்அசதி மற்றம் மன சோர்வு நீங்கிசுறுசுறுப்பு  மேலோங்குகிறது.உளவியல்ரீதியான பாதிப்பின்றும்75% விழுக்காட்டிற்கு  மேலாகமுன்னேற்றம் ஏற்படும். ரத்தஓட்டம்சீரடையும். நரம்பு மண்டலம்  வலிமைபெறும். மூளையில் ரத்தஓட்டம்மிகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.கழிவுகள் மற்றும்நச்சுப்பொருட்கள் நம் உடலைவிட்டு முழுவதும் நீங்கும். நம் உடலை, மனதை ஆரோக்கியமாகவும், முறையே வலிமையாகவும், வளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அளவுக்கதிகமான  உடல்கொழுப்பைக் கரைத்து விடும்.  ஆயுள் அதிகரிக்கும். நினைவாற்றல் மிகமிக அதிகரிக்கும். நம் வயிறு,  கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களை வலிமையாக்கி சீரணமண்டலத்தைச் சீராக்கும். குரல்வளம்  மிகும். ஆன்மிக பலம்அதிகரிக்கும். அலைபாயும் மனதுஒடுங்கி       தன்னம்பிக்கை  மிகும்.*

*உள்ளொளி பெருகும். (ஆன்மிகஉணர்வு) மேலோங்கி மனஆற்றல்சிறக்கும்*

*மேலும் சில பலன்கள் : 72,000 நாடிகளும் (ட்யூபுலர்சேனல்ஸ்) சுத்தப்படுத்தப்படுகின்றன.  நுரையீரலின் கொள்ளளவு மிகும். ஆஸ்துமா, ஈஸ்னோ பிலியாசைனஸ் மற்றும் பல நோய்களை வேரோடுஅழிக்கலாம். நினைவாற்றல் பலமடங்கு  பெருகும். அலைபாயும் மனதுஒடுங்கும். உடல் புத்துணர்ச்சிபெரும்.  உளவியல் ரீதியானபிரச்சனைகள், மனோ பயம் நீங்கும்.*

 🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️
*📚மனிதனின்  வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது  என ஞானசர நூல்  விளக்குகிறது.*

*1. இடது நாசியில் சுவாசம் நடக்கும்போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும்என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தைதாய் நாடி எனவும், பெண் நாடிஎனவும்,  சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில்  சுவாசம் நடைபெறும்போது அர்ச்சனை, குடமுழக்கு,திருமணம் போன்ற சுபநிகடிநவுகள்இயற்றிட உத்தமம்.*

*2. வலது நாசியில் சுவாசம்நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின்செயல்பாடுகள் நிகழும் நேரத்தைஆண்நாடி எனவும்,  தந்தை நாடிஎனவும், பிங்கலை எனவும், சூரியநாடி எனவும், சூரியகலை  எனவும்அழைத்தனர். இந்த நாடிசெயல்படும்போது சங்கீதம்,உபதேசம்,  கற்றல் ஆகியபணிகளைச் செய்யலாம்.*

*3. சுழுமுனை, இரு நாசிகளிலும்சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர்நலம்  நாடி வேண்டினால் வெற்றி உண்டாகும். இந்த சுழுமுனையைஇறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும்அழைத்தனர்.*

*ரேசகம் – உள் வாங்குதல்*

*பூரகம் – வெளி விடுதல்*

*கும்பகம் – உள்ளே நிறுத்துதல்*
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️


 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
*இந்தியாவில் ஒரு சில சாதுக்களையும் துறவிகளையும் அவர்கள் உணவு உண்ணும் விதத்தைக் கொண்டு வகையறைப் படுத்துகிறோம். அவர்களில் ஒரு சிலரை பலஹாரி பாபா என்றும் வேறு சிலரை பாவ்ஹாரி பாபா என்றும் அழைக்கிறோம். பலஹாரி என்றால், திட உணவிலிருந்து பழஆகாரத்திற்கு மாறியவர் என்று பொருள். இதுபோன்ற ஒரு யோகிக்கு வெறும் பழ உணவிலேயே தன் உடல் எடையை ஸ்திரமாக வைத்திருக்கக் கூடிய திறன் ஏற்படும். திட உணவிலிருந்து காற்று உணவிற்கு மாறியவரை பாவ்ஹாரி பாபா என்போம். இவர் திட உணவு உண்ணாமல் வெறும் காற்றிலேயே வாழக் கூடியவர். அவர் செய்யும் ஒரு சில ஆன்மீக சாதனாவினால் காற்றை தன் உயிர்சக்தியாக மாற்றக் கூடியவராக இருப்பார். அவரால் உணவு உண்ணாமலேயே உயிர் வாழ முடியும்.*
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️


 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
*📚ப்ராணாயாமம், மூச்சு பயிற்சி செய்யும் முறை (Methods)*

*👃மூச்சு பயிற்சிக்கு  உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும்.*

*👃சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும்.*

*👃புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும்.*

*👃பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.*

*👃இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.*

*👃வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.*

*👃இடது மூக்குத் துவாரத்தின் வழியாக  மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக  வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.*

*👃மூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.*

*👃இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது  நாடி சுத்தமடையும்.*

*👃சாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும். துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை  அறவே தவிர்க்க வேண்டும்.*
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️


No comments:

Post a Comment