T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறது.*

Thursday, August 24, 2023

*நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறது.*

 *📚நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறது.*



*உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது,அதிலிருந்து ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு,டீ யை குடித்துவிட்டு,எதேச்சையாய் கவனிக்கிறேன்,அந்த வெல்ல உருண்டையின்மேல் அவ்வளவு எறும்புகள்..!!*

*இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்று எடுத்துக்கொண்டாலும்...*

*அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும்,சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம்.அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டது.*

*இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம்,வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்துவிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று..!*

*யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!!*

*இங்குதான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.*

*எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை... உணவும் எறும்பை தேடியிருக்கிறது..!*

*தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும், மற்றொன்று பொருளாக இருந்தாலும், இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும்.*

*அந்த புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன.*

*நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறது.*
*என்று ஞானியர்கள் கூறுவது எவ்வளவு பேருண்மை..!!!*

*நிற்க,!*

*இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படும்...*
*எறும்பு தேடியது விரைவாக கிடைத்துவிடுகிறது,நாமும் தேடுகிறோம்,ஆனால் நமக்கு அப்படி கிடைப்பதில்லையே...அல்லது காலதாமதமாகிறதே...?!*

*ஒரே வித்தியாசம்தான்...எறும்பு தனது தேவைக்கு தேடுகிறது...*
*நாம் தேவைக்கும்மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்..!*

*நமக்குத் தேவையானது ஆல்ரெடி நம்மிடம் இருக்கிறது,அல்லது தேவைப்படும் நேரத்தில் அது கிடைத்துவருகிறது.*

*நமது முயற்சிகள் மேற்கொண்டு தேடுவதிலேயே இருப்பதால்,..*

*தேவைக்கு நம்மிடம் உள்ள இருப்பு,*

*நம் கவனத்திற்கு வருவதில்லை...!*

*விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது இயல்பு*

*இயல்பாக இருக்க பழகுவோம்...*
..கோகி...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment