T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-21, பாடம்-21 கர்மாவை தொலைப்பது எப்படி??

Thursday, August 24, 2023

Lesson-21, பாடம்-21 கர்மாவை தொலைப்பது எப்படி??

  ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-21, பாடம்-21👃📚*

*📚கர்மாவை தொலைப்பது எப்படி??📚




திருமண தடை மற்றும் திருமண தாமதம் ஏற்படுவதில் மிக முக்கிய பங்கு கெட்ட கர்மாவுக்கே உள்ளது?

செலவு அதிகம் ஆகி கையில் பொருளோ பணமோ தங்குவதில்லை, உழைப்பு அதிகமாகவும் அதனால் ஈட்டும் பலனோ குறைவாக இருப்பது (அதாவது குறைவான சம்பளத்தில் பலமணிநேர வேலை) வீட்டில் சந்தோஷமில்லா நிலை. அடிமை வாழ்க்கை, நிம்மதியை தொலைத்த வாழ்வு போன்ற அனைத்துமே கர்மா வினையால் ஏற்படும் பலன்களே.

உடலும் மனமும் நொந்தால் நம் கர்மா குறைகிறது. தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு மனம் வருந்தினாலும் கர்மவினை குறையும். நோய் வந்தால் உடலும் மனமும் நோகும். நோய் வந்து உடல் கஷ்டப் படுவது என்பது கட்டாயம் அனுபவித்தே கர்மாவை கழிக்க வேண்டும். ஆனால் அதே உடல் கஷ்டத்தை வேறு வகையில் நாம் அனுபவித்து நம் கர்மாவை குறைக்க ஒரு வழி உண்டு. அதுதான் சேவை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத, கூலி வாங்காமல் பிறருக்கு நாம் செய்வதே சேவை. சேவை என்பது நமக்கு எப்படியாவது நன்மை பயக்கட்டும் என்ற எண்ணத்தில் செய்யக் கூடாது. மனம் உவந்து, பிறருக்கு உதவுவதே சேவை. அவ்வாறு உடல் நோக சேவை செய்வது, உடல் நோக நோயில் படுப்பதில் இருந்து உங்களை பாதுகாக்கின்றது. அதற்கும் இதற்கும் சமண்பாடு ஆகிவிடுகிறது. மனதிற்கு இது (சேவை) சந்தோஷத்தை தருகிறது. ஆனாலும் கர்மா குறைகிறது. நோய் வந்தால் உடலும் மனமும் நோகிறது. சேவை செய்தால் உடல் நோகிறது. ஆனாலும் மனம் குதூகலம் அடைகிறது. (தனக்கு திருமண யோகாம் கிடைக்க மற்றவர்களது திருமணத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு உதவியாக இருந்து சேவை செய்வதும் கர்மாவை கழித்து நல்ல யோகத்தை பெறுவது போன்றதே..அதாவது மற்றவர்களது திருமணத்திற்கு உதவி செய்து தனக்கான திருமண யோகத்தை பெறுவது) கடந்த 7 வருடங்களில் புது தில்லி மாங்கல்யம் குழுவில்  4350+ திருமணங்களை நிச்சயம் செய்திருப்பதும் இந்த குழுவை வழி நடத்திச்செல்லும் குழு தலைமை நிர்வாகிகளின் திருமண சேவை என்கிற அடிப்படையிலேதான்...  மொத்தத்தில் குழு நிர்வாகிகள் (அட்மின்கள்) சேவை மனப்பான்மையே குழு உறுப்பினர்களின் கர்மவினையை போக்கி அவர்களுக்கு ஒரு யோகமான விழியை வகுத்து தருகிறது... (இன்றைக்கும் இந்தக் குழுவில் பலரும் நினைப்பது என்னவென்றால் இந்தக்குழுவில் சேர்ந்தால் திருமணம் நிச்சயம் ஆகிவிடும் என்பதாக பலர் ஆர்வத்தோடு இந்தக்குழுவில் சேர்கிறார்கள்....  அவர்களின் ஆர்வம் மற்றும் அந்த நினைப்பே அவர்களுக்கான வழியை வகுத்துத்தருகிறது.)

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து என் கர்மாவை கழிக்கின்றேன் என்று சொல்ல முடியாது. என் கைப்பட அந்த அன்னதானத்தில் நான் எவ்வளவு சேவைகள் செய்கிறேன் என்பதிலும் விஷயம் உண்டு. எங்கோ காசியில் அன்ன தானம் செய்ய நேரில் போக முடியாது. பணம் மட்டுமே தரமுடியும். ஆனால் இங்கு அருகில் நடக்கும் எந்த பொது நிகழ்ச்சிகளில் நம்மால் முடியுமோ அங்கெல்லாம் சென்று பிறருக்கு சேவை செய்து நம் கர்மாவை இயற்கையாக குறைக்க வேண்டும். புண்ணியங்கள் செய்ததை சொன்னால் குறையும். ஆகவே நான் இதைச் செய்தேன் அதை செய்தேன் என்று பெருமை பீற்றிக் கொள்ள வேண்டாம்.

கர்மாவை குறைக்க மற்றொரு வழி முறை உண்டு. அதுதான் தியானம். அலைபாயும் மனதை அடக்குவதும் உடல் நோக ஒரே இடத்தில் அமர்வதும் கர்மாவை குறைக்க ஒரு வழி. ஆனால் இதை செய்தால் மனம் ஒரு நிலைப்படும், நோய் வந்து உடல் நொந்து போவதற்கு பதில் தியானம் செய்து மனதிற்கு தேவையான அளவு அலைபாய விடாமல் தடுத்து முதலில் கஷ்டத்தை கொடுக்கிறோம். ஆனால் இயற்கையாக நம் மனம் சிறப்புறுகிறத, அதே நேரத்தில் கர்மாவும் குறைகிறது.

சில ஆன்மீகவாதிகளை தரிசிப்பது மாற்றும் அவர்களின் சொற்ப்பொழிவு கேட்பது , சில மடாதிபதிகள் மற்றும் மகான்களின் ஆசீர்வாதங்கள் பெறுவது, சில சித்தர்களின் நேரடி மற்றும் மானசீகமான ஆசீர்வாதங்களை பெறுவது, தீர்த்த யாத்திரை மற்றும் திருவருள் நிறைந்த திருத்தலங்களுக்கு விஜயம் செய்து தரிசனம் செய்வதும், தாய், தந்தை, குரு மற்றும் நம்மை சுற்றியுள்ள பெரியவர்களின் ஆசீர்வாதங்களும் நமது  கெட்ட  கர்மவினையை கரையச்செய்யும் செயல்களே.

இன்னும் சில எளிய வழிகள் உள்ளன. கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி, எறும்புகளுக்கு வெல்லம், அரிசி மாவு, காக்கைக்கு உணவு. பசு, காளைமாடு, நாய் பூனை, போன்ற வீடுகளில் விரும்பி வளர்க்கும் மிருகங்கள், பறவைகள், செடி கோடி தாவரங்கள் என அவைகளை பராமரிக்கும் சேவை போன்ற நற்செயல்களும் கர்மாவை குறைக்கும்.


இது அனைத்தும் குருமார்கள் எனக்கு உபதேசம் செய்தது. என் சொந்த சரக்கு அல்ல.

ஒருவர் ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபட்டு ஒரு சிறந்த ஆன்மிக சத்குருவிடம் சரணடையும் போது சத்குருநாதர் அளப்பறிய கருணையினாலும் தவ வலிமையினாலும் சரணடைந்தவரின் சஞ்சித கர்ம வினை மூட்டையை அழித்து விடுவார்.

மேலும் புதிய கர்மாக்கள் ஏற்படாத வண்ணம் ஆன்மீக பாதையை வழி வகுத்துக் கொடுப்பார்.

ஆகையால் ஆகாமிய கர்மா நசிந்துவிடும் அல்லது ஏற்படாது.

பொதுவாக எஞ்சிய பிராரப்த கர்மாவாவே அனைவரும் அனுபவித்தே கழிக்க வேண்டும்.

பொதுவாக குரு அவர்கள் பிராரப்த கர்மாவை எதுவும் செய்வதில்லை.

ஒரு குருவிடம் சரண் அடையவில்லை என்றால் சுயமாக கர்மவினைகளை கரைக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு குருவிடம் சரணடையாமல் பலர் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டு முக்தி அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை பகவான் ரமண மகரிஷி அவர்களுக்கு குரு என்று ஒருவர் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக உங்கள் கேள்விக்கான பதில் கர்மாவினால் பல தடைகள் ஏற்படுவதோடு அது அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடருமா என்றால் ஆமாம் குறிப்பாக சஞ்சித கர்மா இருக்கும் வரை அதிலிருந்து ஒரு பகுதியாக பிராரப்த கர்மாவை கொண்டு ஒவ்வொரு பிறவியாக இந்த கஷ்ட்ட பிறவிகள் தொடரும்.

சேவை செய்பவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, சேவை மனப்பான்மை கொண்டவரின் சேவைக்கு தடையாக இல்லாமல் தலைவணங்கி வழிவிடுங்கள்.. அதுவே உங்களின் கர்மவினையை போக்கி உங்களை சிறப்பாக வழிநடத்தும்.

*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி  ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

மேற்கண்ட எழுத்துருவில் சில  விவரங்களை குறிப்பிட்டாலும், எனது குரல் பதிவில் பல உதாரணங்களை கூறியிருப்பதை கேட்டு உங்களுக்கு உகந்த ஒரு வழிமுறையை கெட்டியாக பற்றிக்கொண்டு முழு நம்பிக்கையோடு செயகளை செய்தாலே எப்படிப்பட்ட கெட்டவினையையும் போக்கி நல்ல வினைகள் உறுதுணையாக உங்களை காத்து ரட்சித்து, வளமான, மனதுக்கு இதமான வாழ்க்கையை தரும் அனுபவத்தை பயிற்சி மேற்கொண்ட மிக குறிகிய காலங்களிலேயே சிறப்புகளை அனுபவிக்கும் வாய்ப்பை பெறலாம். 

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் Lesson/பாடம் -22 "கர்மயோகா" செய்வது எப்படி? என்கிற சித்த வித்தை பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...  நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment