T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: மனம் போடும் வேடங்களை துறந்தால் ஞானம் தான்

Thursday, August 24, 2023

மனம் போடும் வேடங்களை துறந்தால் ஞானம் தான்

 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*📚மனம் போடும் வேடங்களை துறந்தால்  ஞானம் தான்📚*

*போதும் போதும்*
*போலி நாடகம்*
(ஞான சிந்தைக்கும் & மனனத்திற்குமான கவி வரிகள்)

*ஆசை என்று உள்ளே*
*ஒன்று மோசம் செய்யுதே!*
*அது பூசை என்று வெளியே உன்மேல் பாசம் செய்யுதே!*

*நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே!*
*அது  நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே!*

*எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்று தோணுதே!*
*செய்த ஒவ்வொன்றிலும் சுயநலமே என்ன நாணுதே!*

*போதும் போதும் போதும்  இந்த போலி நாடகம்*
*உந்தன் பாதம் ஒன்றே ஆக வேண்டும் எந்தன் தாரகம்.*

*பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே!*
*பலர் புகழ இன்னும் புகழு! என்னும் கள்ளம் வெல்லுதே!*

*காம, கோபம் வென்றோம்  என்று வாயும் சொல்லுதே!*
*உள்ளே விருப்பும் வெருப்பும் தலைவிரித்தே ஆடிச் செல்லுதே!*

*பசி ருசியை கடந்தோம்  என்று மாறு தட்டுதே!*
*இந்த புசி என்றே தினம் நாக்கும் வயிறும்  காலை கட்டுதே!*

*போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்*
*எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்.*

*சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது!*
*ஆனால் ஜெகத்தினையே  ஜெயித்ததாக சொல்லி அலையுது!*

*நன்று செய்த நல்லவரை அன்றே மறக்குது!*
*இது குன்று போன்ற குறை சுமந்தும்  கூசாது இருக்குது!*

*வந்தவர்க்கே அறிவுரையை வாரி வழங்குது!*
*இது தன் வாழ்க்கையில் தத்தளித்தே வாடி வதங்குது!*

*போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்*
*எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்.*

*நினைத்தபடி நடப்பதுவே எந்தன் வாடிக்கை!*
*அது உன் நினைவே  என்று சொல்வது என்ன வேடிக்கை!*

*உனக்காகவே வாழ்ந்திடுவேன் என்று பாரிக்கை!*
*பின் எனக்காக இது செய்! என்று என்ன கோரிக்கை!*

*துறவி என்று  கூறிக்கொண்டும் எதையும் துறக்கலை!*
*இந்த பிறவிக்கேனோ ஞானம் ஏதும் இன்னும் பிறக்கலை.*

*போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்,*
*எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்.*
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

No comments:

Post a Comment