T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: சுழுமுனை பற்றி "ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்"

Thursday, August 24, 2023

சுழுமுனை பற்றி "ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்"

  📚📚📚📚📚📚📚📚📚📚

*🙏ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்🙏*

*👃#சுழிமுனை :*

*சுழிமுனை  நமக்கு இரு புருவங்கள் நடுவே நம் நெற்றியில் அனைத்து நினைக்கக்கூடிய விசயங்களை எண்ணத்தின் பிரதிபலிப்பு அனைத்தையும் அல்லது நாம் தவத்திற்கு அமரும் முன்பு தாம் செய்த தவறுகள் அனைத்தையும் நினைத்து இரு புருவ மத்தியில் உணர்வோடு எரித்து முடிப்பது போல நாம் கவனிக்க வேண்டும்.*

 *பிறகு உணர்வோடு அந்த உணர்வை அங்கே உணர  ஏற்பட்டு இலேசாக துடிப்பு ஏற்படும். இந்த இடத்தில் நிறுத்தி கவனிக்கும் போது நம் மனம் அமைதியாக சாந்தம் பெற இது ஒரு வழி ஒரு தவத்திற்கு போகும் போது நம் எண்ணம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.* 

*நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை அந்த உணர்வோட தவக்கனலோடு நெற்றிக்கண்ணில் எரித்து ஒழித்த பிறகு பாவனை செய்துவிட்டு நாம் தவத்திற்கு போகலாம்.*

*சுழிமுனை நெற்றியில் உள்ள விசயங்களை சரியாக்குவதற்கு நம்மை நாம் அறிவதற்குதான் இந்த நெற்றிக்கண் இந்த சுழிமுனை  நாக்கு முனை நாக்கு முனையில் தான் வந்து நாம் சொல்லும் சொல்லுக்கு வந்து சக்தி உண்டு தவக்கனலோட நமக்கு வாக்கு சுத்தம் வேணும் என்று ஆன்மீகத்தில் சொல்லுவார்கள்.*

*முக்கியமாக ஆன்மீகவாதிக்கு வாக்கு சுத்தம் வேண்டும்.*

*கொடுத்த வாக்கை நாம் காப்பாற்ற வேண்டும்.*

*நல்ல சொற்கள் அறிவுப்பூர்வமான சொற்களை சொல்லி பிறரையும் அறிவை அறிய செய்வதுதான் நம்முடைய முக்கியமான ஒரு நோக்கம்.*  

*இதுதான்  சுழிமுனை நெற்றியில் உள்ள விசயங்களை சரியாக்குவதற்கு நம்மை நாம் அறிவதற்குதான் இந்த நெற்றிக்கண்  சுழிமுனை...*
👃🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️👃

No comments:

Post a Comment