T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: சித்த வித்தை – விளக்கம்:

Thursday, August 24, 2023

சித்த வித்தை – விளக்கம்:

  📚🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️📚


*📚சித்த வித்தை –  விளக்கம்:-*

*”தன்னில் இருக்கின்றதும் அதோகதியாகி வெளியே பொய்க்கொண்டிருக்கும் ஜீவனை , அப்படி வெளியே போய் அழிய விடாமல் , தன்னுள்ளே எப்போதும் மேலும் கீழும் நடத்தி , தன்னில் இருக்கின்ற பிரமரந்திரத்தை தட்டித் திறந்து , அதில் ஜீவனை அடக்கி இருப்பதற்காக வேண்டி கற்றுக்கொள்வதே சித்த வித்தை ஆகும் ”*

*கருத்து : ஜீவன் = 👃சுவாசம்*

*அதாவது சுவாசம் வெளியேபோய் வீணாகாமல் , உள்ளே நிறுத்தி , அதன் மூலம் சுழிமுனை வாசல் திறந்து , பின் அந்த நாடியில் வாசி உற்பத்தி செய்து , அதை மேலும் கீழும் உலாவஸ் செய்தும் , அதன் மூலம் பிரமரந்திரத்தை தட்டித் திறந்து , ஆன்ம தரிசனம் செய்வது தான் சித்த வித்தை ஆகும்*

*வாசி இல்லாமல் ஞானம் அடையமுடியாது -இது திண்ணம்*

*ஞானம் இல்லாமல் தன்னை ஆன்மாவை தரிசிக்க முடியாது*

*தன்னை பாராமல் – தன் தலைவனை – சிவத்தை –  அருட்பெரும் ஜோதியை தரிசிக்க முடியாது🙏*

*🧘‍♀️இது அஷ்டமா சக்திகளுக்கு சாதனா படிகள் ஆகும் – இது ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய படிகளாகும்.. நமது வாழ்க்கையில்  நம்மையறியாமல் நாம் இந்த 8 வித அஷ்டமா சக்திகளை பயன்படுத்துகிறோம் என்பதை கூட நமக்கு நாமே தெரிந்து கொண்டு மேலும் அந்த வித்தையை உணர்ந்து அதை நமது வாழ்க்கையில் சிறப்பாக பயன்படுத்தும் பயிற்சிகளை தொடர்ந்து சாதகம் செய்தால் எல்லா வழிகளிலும் வெற்றியை தன்வசப்படுத்தமுடியும்..🧘‍♂️*

*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி  ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment