T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: அமைதியைத் தேட வேண்டாம், அமைதியாக மாறி விடுங்கள்".

Thursday, August 24, 2023

அமைதியைத் தேட வேண்டாம், அமைதியாக மாறி விடுங்கள்".

  📚👍📚👍📚👍📚👍📚👍   


*📚"அமைதியைத் தேட வேண்டாம், அமைதியாக மாறி விடுங்கள்".*             

*சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது!*

*வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.*

*நாய்கள் ஓட ஆரம்பித்தன.*

*ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.*

*போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.*

*அதற்க்கு அவர் சொன்ன விடை -*

*🌟“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.*

*சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.* 

*அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.*

*ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.*

*அப்படி செய்வது நமக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.*

*தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..*

*🌟அமைதியைத்_தேடவேண்டாம்...*

*நாம் அமைதியை அங்கும், இங்கும் தேடி அலைகிறோம் ஆனாலும் கிடைக்கவில்லை ஏன் என்று தெரியுமா?நாம் நாம் அங்கும், இங்கும்தேடி அலைவதால் தான் அமைதி நமக்குக் கிடைக்கவில்லை என்பதுவே உண்மை.*

*உங்களுக்கான அமைதி எங்கே இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் தேடும் அமைதிக்கான இரகசியம் தெளிவாகத் தெரியும்.*

*உதாரணமாக நீங்கள் ஒரு இடத்தில் பணிபுரிவாதாக இருந்தால் உங்கள் முதலாளி கோபத்தில் உங்களை பேசுவதற்கு நீங்கள் அவரிடம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் நகர்ந்து வருவீர்கள் ஆனால் உங்கள் மனைவி அல்லது உங்கள் பெற்றார் உங்களை தெரியாமல் உங்களை ஏதேனும் ஒன்றை கூறிவிட்டாலும் அதிகமான கோபத்தை அவர்கள் மீது காட்டுவீர்கள் அது ஏன்?*

*அப்படி என்றால் உங்களுக்கான அமைதி எங்கே உள்ளது?*

*உங்கள் மனம், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்ச்சிகள் எங்கே, யாரிடம், எப்படி சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தான் உங்களுக்கான அமைதி இருக்கும்.*

*அப்படி என்றால் உங்களுக்கான அமைதி உங்களுக்குள் தானே இருக்கும்? அதை வெளியே தேடி அலைவதால் எப்படிக் கிடைக்கும்?*

*சரி எங்களுக்கான அமைதியை நாங்கள் எப்படி உணர்வது என்று கேட்கிறீர்களா?*

*🌟"அமைதியைத் தேட வேண்டாம், அமைதியாக மாறி விடுங்கள்".*

*இது சிரமமான வழியாகத் தோன்றலாம் ஆனால் இது மட்டுமே உண்மையான வழி. இது மட்டுமே ஒரே ஒரு வழி.*

*🌟"பயிற்சியும், முயற்சியும் உங்களிடம் இருந்தால் எதுவும் சாத்தியமே".*
📚👍📚👍📚👍📚👍📚👍

No comments:

Post a Comment