T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *உண்மையில் எண்ணிப் பார்த்துப் பதிலைச் சொல்! நீ தகுதியானவன் தானா?

Thursday, August 24, 2023

*உண்மையில் எண்ணிப் பார்த்துப் பதிலைச் சொல்! நீ தகுதியானவன் தானா?

 😂📚😂📚😂📚😂📚😂📚

*ஒரு இளைஞன்  ஒரு நாள் தன் குருவிடம் சென்றான். குருஜி நான் வேதங்களைப் படிக்க விரும்புகிறேன் என்றான்.*

*உனக்கு சம்ஸ்க்ருதம் தெரியுமா?* *என்று கேட்டார் குருஜி.*

*இளைஞன் எனக்குத் தெரியாது குருஜி.*

*சரி அது போகட்டும், இந்திய தத்துவமாவது நீ படித்திருக்கிறாயா?*

*இல்லை. தத்துவம் எதையும் நான் படிக்கவில்லை.* *ஆனால் அதற்கும் மேலாக ஹார்வர்டில் தர்க்கம்.* 
*அது தான் லாஜிக் பற்றி படித்து டாக்டர் பட்டம் பெற்றேன்.* 

*இப்போது கொஞ்சம் வேதமும் படிக்கலாமே என்று உங்களிடம் வந்தேன்.*

*வேதம் படிக்க நீ தயாராக இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.* *மிக ஆழ்ந்த ஞான அறிவைக் கொண்டது அது.* *இருந்தாலும் உன் ஆசையை நான் பெரிதும் மெச்சுகிறேன்.* 
*நீ படித்த தர்க்கம் அது தான் ஹார்வர்டில் பெரிய பட்டம் வாங்கி இருக்கிறாயே  அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.*

 *நீ  தர்க்கத்தில்,*
*எனது சோதனையில் தேறி விட்டால் உடனே வேதத்தை ஆரம்பிக்கலாம் சரியா?*

*பூ! இவ்வளவு தானா! லாஜிக்கில் நான் தான் மாஸ்டர். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள்.* *ஹார்வர்ட் ஆன்ஸர் தயார்!*

*குருஜி இரண்டு விரல்களைக் காட்டினார்.*
*இதோ பார்! இரண்டு பேர்கள்! இவர்கள் இருவரும் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.*

*ஒருவன் முகம் கரி படிந்திருந்தது.* *இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது.* 
*இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?*

*ஹார்வர்டு மாஸ்டர் டிகிரிக்கு ஒரே சிரிப்பாக வந்தது.*
 *இது ஒரு கேள்வியா?*

*குருவைப் பார்த்தான்,* *ஏளனம் தொனிக்க,*
*இது லாஜிக் டெஸ்டுக்குத் தகுதியான கேள்வி தானா,* *சொல்லுங்கள் குருஜி! என்றான்.*

*குருஜி சொன்னார்* 
*அது கிடக்கட்டும்,*
*பதிலைச் சொல்லேன்,* *மாஸ்டர்!*

*இளைஞன் எவன் முகம் கரி படிந்திருக்கிறதோ அவன் தான் முதலில் முகத்தைக் கழுவுவான்.*

*குருஜி  தப்பு சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவனே முதலில் முகத்தைக் கழுவுவான்.* *ஏனெனில் கரி பூசிய முகத்தோடு இருப்பவன் சுத்தமான முகத்தைக் கொண்டிருப்பவனைப் பார்த்து தானும் சுத்தமாக இருப்பதாக நினைத்துக் கொள்வான்.*

*ஆகவே அவன் முகம் கழுவ மாட்டான்.*
*ஆனால் சுத்தமான முகத்தை உடையவனோ கரி பூசிய முகம் கொண்டிருப்பவனைப் பார்த்து தன் முகமும் இப்படி கோரமாக இருக்கும் என்று நினைத்து  முதலில் முகம் கழுவப் போவான்.*

*இளைஞனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.*
*சரி இன்னொரு கேள்வி கேளுங்கள் குருஜி* 
*இந்த முறை சரியாக பதிலைச் சொல்கிறேன்.*

*சரி  இதோ எனது கேள்வி!  இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.*
*ஒருவன் முகம் கரி படிந்திருந்தது.* *இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது.* 

*இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?*

*அது தான் ஏற்கனவே பதில் இருக்கிறதே! யார் முகம் சுத்தமாக இருக்கிறதோ அவன் தான் முதலில் முகம் கழுவச் செல்வான்!*

*தப்பு  இருவருமே முதலில் முகம் கழுவச் செல்வர்.*
*சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவனை,* *கரி பிடித்த முகம் கொண்டவன் பார்த்து தனது முகம் சுத்தம் என்று நினைப்பான்.*
*கரி பிடித்த முகத்தைக் கொண்டவனைப் பார்த்து சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவன் தன் முகமும் கரி பிடித்திருக்கிறது என்று நினைப்பான்.*

*ஆகவே சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவன் தன் முகத்தைக் கழுவச் செல்வான்.* *அவனைப் பார்த்த கரிபிடித்த முகக்காரனும் தன் முகத்தைக் கழுவச் செல்வான்.* *இருவருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்வர்.*

*இப்படி நான் நினைக்கவில்லையே*
*தர்க்கத்தில் இப்படி ஒரு தப்பை நான் செய்வேன் என்று நினைக்கவே இல்லை குருஜி.* 

*தயவு செய்து இன்னும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு என்னைச் சோதியுங்கள்.*

*சரி இதோ எனது கேள்வி!  இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.*
*ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது.*
*இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?*

*இரண்டு பேருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்வர்.*

*தப்பு!*  *இருவரில் யாருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ள மாட்டார்கள்.*

*கரி பிடித்த முகம் கொண்டவன் சுத்தமான முகம் கொண்டவனைப் பார்த்து தானும் அதே போல் இருப்பதாக நினைப்பதால் அவன் முகம் கழுவச் செல்ல மாட்டான்.* 

*சுத்தமான முகம் கொண்டவன் கரி பிடித்த முகக் காரனைப் பார்த்து அவனே தன் முகத்தைக் கழுவச் செல்லாத போது தான் ஏன் முகம் கழுவச் செல்ல வேண்டும்.* 

*என்று நினைத்து சும்மா இருப்பான்.* *ஆகவே இருவருமே சும்மா தான் இருப்பார்கள்.*

*ஹார்வர்ட் மாஸ்டர் வெறுத்துப் போனான்.* 
*தன் படிப்பு என்ன ஒரு படிப்பு என்று அவனுக்குத் தோன்றியது.* 

*குருஜி  கடைசி சான்ஸ்! தயவு செய்து  கடைசியாக ஒரே ஒரு முறை ஒரு கேள்வியைக் கேளுங்களேன்.*

*சரி இதோ எனது கேள்வி.*
*இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.*

*ஒருவன் முகம் கரி. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது.* 
*இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?*

*இளைஞன் நன்கு முழித்துக் கொண்டான்.* *பெருமையாக, இருவருமே முகம் கழுவிக் கொள்ள மாட்டார்கள்* *என்றான்.*

*குருஜி சிரித்தார் தப்பு.* 
*உனது தர்க்க அறிவு ஏன் வேதம் படிக்கப் போதாது என்று கூறுகிறேன் என்பதை எண்ணிப் பார்.* 

*ஒரே புகைக் கூண்டிலிருந்து ஒரே சமயத்தில் இறங்கும் இருவரில் ஒருவன் முகத்தில் மட்டும் கரி படிந்திருக்கும், இன்னொருவன் முகம் சுத்தமாக இருக்கும் என்பதை நீ நம்புகிறாயா? அது சாத்தியம் தானா?*

*இந்தக் கேள்வியே சுத்த மடத்தனமான கேள்வி.* *அதைச் சுட்டிக் காட்டுவதற்கு பதில்..  விடை வேறு கூறிக் கொண்டிருக்கிறாய்.*

*இப்படி உனது வாழ்க்கை முழுவதும் முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நீ வேதம் படிக்கத் தகுதியானவன் தானா.* 😂

*உண்மையில் எண்ணிப் பார்த்துப் பதிலைச் சொல்! நீ தகுதியானவன் தானா?*😂

*இளைஞன் விக்கித்துப் போனான்.*😂
📚😂📚😂📚😂📚😂📚😂📚

No comments:

Post a Comment