T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: எல்லாம் அதுவாகவே சரியாகும்

Thursday, August 24, 2023

எல்லாம் அதுவாகவே சரியாகும்

  📚📚📚📚📚📚📚📚📚📚📚📚


*📚எல்லாம் அதுவாகவே சரியாகும்*

*எல்லாம் அதுவாகவே சரியாகும். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதுவும் ஒரு பிரபஞ்ச ரகசியமே.*

*எப்படி ?*

*எந்த ஒரு நிகழ்வும் இங்கு நிலைத்து நிற்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.*

*மாற்றம் ஒன்றே மாறாதது.*

*ஆனால், நாம் தான் சில நல்ல, அல்லது கெட்ட நிகழ்வுகளையோ, பொருட்களையோ, நபர்களையோ பிடித்து வைத்துக்கொண்டு, புலம்பி அமைதி இழந்து திரிகின்றோம்.*

*இது எல்லாமே நமது எண்ணப்பதிவுகள் மட்டுமே என்பதை தெளிவாகஉணர்ந்து கொள்வோம்.*

*ஒருவரைப்பற்றி தப்பான அபிப்ராயம் வச்சிருப்போம். அந்த நிமிடத்தில் அவர் அப்படி இருந்திருக்கலாம்.*

*ஆனால், அடுத்த நொடியே அவர் தவற்றை உணர்ந்து திருந்தியும் இருப்பார்.ஆனால், நாம் தான் நமது மனதில் "அவர் தப்பானவர் தான் என  எண்ணத்தில் பதிந்து கொண்டு, அவரைப் பார்க்கும் போதெல்லாம் எரிந்து பேசியும், வம்பு இழுத்துக் கொண்டும், மனதில் வன்மம் கொண்டும் திரிவோம்.*

*இதில் கூடுதலாக  நல்லவருக்கு காலமில்லை என்று காலத்தை வேறு திட்டுவோம்.*

*நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். காலம்  எனும் கடவுள், பேராற்றல் எல்லாவற்றையும் மிகத்துல்லிதமாக செய்பவர் என்பதை.*

*அதனால், தேவையற்ற எந்த ஒரு எண்ணப்பதிவையும் மனதில் வைக்காமல் இருக்கத்தான் இந்த பிரபஞ்ச ரகசியம்.*

*எல்லாம் அதுவாகவே சரியாகும் என்பதை நன்கு மனதில் பதிவிடுங்கள்.ஆழ் மனதில் பதிய வேண்டும்.*

*எந்த ஒரு பிரச்சனையும், நோயும், வறுமையும் கூட தானே சரியாகும் என்பதை முதலில் நம்ப வேண்டும்.*

*எல்லாம் அதுவாகவே சரியாகும் என்கிற போதே அது எப்படி அப்புறம் நாம எதுக்கு இருக்கோம் ?இப்படி பல கேள்விகள் நம்மை குழப்பும்.*

*ஆனாலும், மனதிற்குள் ஆழமாக பதிவு செய்து கொள்ளுங்கள். எல்லாம் அதுவாகவே சரியாகும்.எல்லாம் தானாகவே சரியாகும் என்ற affirmation நேர்மறை எண்ணத்தை.*

*உதாரணத்திற்கு, உடலுக்கு காய்ச்சல் வந்துவிட்டால்,  நிச்சயமாக உடல் தானே தன்னை சரி செய்து கொள்ளும் என்ற ரகசியம் தெரிந்தவர்கள் உணவை நிறுத்தி, ஓய்வெடுத்து ஓரேநாளில் சரியாகி விடுவார்கள்.*

*ஆனால், அந்த ரகசியம் தெரியாத பலரும், அய்யோ, காய்ச்சலேன்னு பயந்து, பதறி, மருந்து, மாத்திரைன்னு முழுங்கி, இரண்டு நாளில் அதுவே, தானாக சரியாகும் காய்ச்சலை ஒருவாரத்திற்கு இழுத்து கஷ்டப்படுவார்கள்.*

*அப்படி எல்லாம் எதற்காகவும் பதறவேண்டாம்.*

*அதற்காகத் தான் இந்த மாபெரும் ரகசியமான  எல்லாம் அதுவாகவே சரியாகும் என்ற தாரக மந்திரம்.*

*இங்கு நடப்பது எல்லாம் தானே தான் நடந்து கொண்டிருக்கிறது, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் என்பது தானே மாபெரும் உண்மை.*

*எல்லாம் தானே நடக்கும் என்றால், மனம், எண்ணம் இதெல்லாம் எதற்கு ?என்ற கேள்வி தோன்றும்!*

*உதாரணத்திற்கு, மிகப்பெரிய சொத்து தகராறு உங்கள் குடும்பத்தில் வருகிறது எனில், அதனை சண்டை, சச்சரவு என ஆக்கிக் கொண்டே போனால் சின்ன பிரச்சனை பெரிதாகி நிற்கும்.*

*ஆனால், கொஞ்சம் பொறுமையாக இருந்தால், எல்லோருக்குமே மனமாற்றம் என்பது தானே நிகழும்.*

 *புரிதல் வரும். யாருக்கேனும் தேவை வரும். அப்போது மாற்றங்கள் தானே நிகழும்.* 

*அந்த பிரச்சனை செய்த உறவே, தானே வந்து நிற்கும். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.*

*இப்படித் தான் நாம் கொஞ்சம் மட்டுமே அமைதியும், பொறுமையும் கொண்டு எந்த ஒரு நிலையிலும் எல்லாம் அதுவாகவே சரியாகும் என மனதிற்குள் கூறிக்கொண்டே இருந்தால் போதும்.*

*எல்லா மாற்றங்களும், தேவைகளும் தானே இயல்பாக நடக்கும் அதிசயம் புரியும்.*

*ஒவ்வொரு பிரச்சனைகளும் தானே காணாமல் போகும்.*

*சண்டை சச்சரவுகள் வரும்போதெல்லாம், தயவுசெய்து எதிர்த்து நின்று பேச்சுக்களை வளர்க்காமல் ஒதுங்கி விடுங்கள்.*

*நாம் சகித்துக் கொண்டு போவதால் கோழையல்ல .விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே நல்லா இருப்பாங்கன்னு அர்த்தம்.*

*எது நடந்த போதும் மனதிற்குள் இந்த எண்ணத்தை ஆழமாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் அதுவாகவே சரியாகும் என.*

*ஆழ் மனதில் பதிந்த இந்த எண்ணம் பிரபஞ்சமெல்லாம் பரவி, எது சரியோ, அதற்கு சரியான நபரையோ, சூழ்நிலையையோ ஏற்படுத்தி, என்ன நடக்க வேண்டுமோ அதை சரியாக நிகழ்த்தும்*
📚📚📚📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment