T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-10, பாடம்-10 சுழு முனை சுவாச மூச்சு பயிற்சி

Thursday, August 24, 2023

Lesson-10, பாடம்-10 சுழு முனை சுவாச மூச்சு பயிற்சி

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-10, பாடம்-10👃📚*

*📚👃சுழிமுனை சுவாச விழிப்புணர்வு📚

*📚👃சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்📚*

*👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*👃📚

*மேற்சொன்னவைகளை கருத்தில் கொண்டு நமக்கு பழக்கமாகிவிட்ட மூச்சு பயிற்சியையும்,தியானத்தையும் செய்யும் முறையை கீழ்கண்ட ஆடியோவில் கூறியிருக்கிறேன்..*.

*பயிற்சி:-*😷🔔🔔🔔🔔
*சென்றவார தொடர்ச்சி....*👇

*5)இப்போது நீங்கள் உங்களின் சுழிமுனை ரகசியத்தை பயன்படுத்தவேண்டும்... அது உங்களை வழி நடத்தும்.. உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அறிவாற்றலை தரும்... அது எப்படியிருக்கும் என்பதை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்...*

**சுழு முனை**

**இரண்டு துவாரத்திலும் ஒரே நேரத்தில் சுவாசம் சென்றால் அந்த நாடிக்கு " சுழு முனை " என்று பெயர். சாதாரண நிலையில் ( யோக மார்க்கத்தை கற்றுக் கொள்ளாதவர்களுக்கு)எப்பொழுதாவது தான் சுழுமுனை கூடும். ஞானிகளுக்கு அடிக்கடி சுழுமுனை கூடும். சித்தர்கள் எந்தெந்த நாடி ஓடுகையில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்**

*📚ஔவையார் அருளிய ஸ்ரீ விநாயகர் அகவல்...*                          
*19, இடை பின் கலையின் எலுத்தறிவித்துக், கடையிற் சுழிமுனைக் கபாலமும் காட்டி.. {இடை, பிங்களை என்னும் நாடிகள் மூலம் உட்கொள்ளப்படும் பிராண வாயுவின் துணை கொண்டு குண்டலினியை சுழுமுனை வழியே கபால வாயில் வரை செலுத்தும் வித்த்தை எனக்கு அறிவித்து.}*

*📚திருவள்ளுவர்*
*"எழுபத் தீராயிர நாடி யவற்றுள், முழுபத்து நாடி முதல்."*

*உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது.*

*📚 திருமூலர்,*
*“நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்” என்று அவத்தை பேதத்தில் கூறியுள்ளார்.*
*நாடிகள் உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச் சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன.*

*📚பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. இதிலும் இடகலை,பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.*

*👃இடகலை – வாத நாடி*
*👃பிங்கலை – பித்த நாடி*
*👃சுழிமுனை – சிலேத்தும நாடி*

*இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.*

*👃இ(டை)ட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் கற்று.இதுவே சந்திர நாடி. சக்தி நாடிஎன்போருமுண்டு.*

*👃பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு.இதைச் சூரியநாடி,சிவநாடிஎன்பர்.*

*👃சுழிமுனை – அக்கினி நாடி.இடத்திற்கு இடம் மறுபடும்.*

*🌟அதாவது அண்டம், பிண்டம்,சூக்குமம், அதி சூக்குமம்.*

*🌟அறிவாலுணர்வது அண்டம்.*

*🌟உணர்வாலுணர்வது பிண்டம்.*

*🌟நினைவால் உணர்வது சூக்குமம்.*

*🌟கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.*



*❌சுவாசம் பற்றி நன்கு உணர்ந்த நாம், அதை சரியாக பின்பற்றுவதில்லை.❌*

*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி  ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment