T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-6&7, பாடம்-6&7 மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!

Thursday, August 24, 2023

Lesson-6&7, பாடம்-6&7 மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!

  👃🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

*💐Meditation தியானம்💐*

*📚👃Lesson-6&7, பாடம்-6&7👃📚*

*📚பிராணாயாமம்.. சுவாச விழிப்புணர்வு📚

*📚சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்📚*

*👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*👃📚


 🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
*📚10காற்றுகளை (வாயு) "தசவாயுக்கள்" என அழைப்பர். அவை*

*1. பிராணன், 2. அபானன், 3. வியானன், 4. உதானன், 5. சமானன், 6. நாகன், 7. கூர்மன், 8. கிருகரன், 9. தேவதத்தன், 10. தனஞ்செயன் என்பனவாகும்.*

🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

*❌எச்சரிக்கை ❌:* *பயிற்சியாளரின்உதவியின்றி எந்த பிராணயாமப் பயிற்சிகளும்  செய்யக்கூடாது. இதயநோயாளிகள் கும்பக நிலையில்மூச்சை  உள்நிறுத்துதல் மிககுறைந்த அளவே இருக்க வேண்டும். அல்லது  நோயின் தன்மைக்கேற்பகும்பகம் செய்யாமல் இருப்பதுநல்லது.  அதே போல ரேசகம்குறைந்த மாத்திரையில் செய்யவேண்டும்.*
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

*ப்ராணாயாமங்கள் எட்டு வகைப்படும்,*
1) உஜ்ஜை பிராணாயாமா, 
2) அனுலோமா விலோம பிராணாயாமம், 
3) கபாலபதி பிராணாயாமம், 
4) அக்னிசார பிராணாயாம, 
5) ப்ராமரி பிராணாயாம, 
6) சூர்யா பந்தன, 
7) பஸ்திரிக பிராணாயாமம், 
8) சந்திர, சூர்ய பஸ்திரிக பிராணாயாமம்.

*பொதுவாக யோகத்தில் மூன்றுவிதமான மூச்சுகள்கூறப்படுகின்றன.*
1. தோள்பட்டை சுவாசம்
2. மார்பு சுவாசம்
3. அடிவயிற்று சுவாசம்
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

*பிராணயாமத்தின் நான்கு படிகள்:-*
*பூரகம்* -மூச்சை உள்ளிழுத்தல்
*கும்பகம்* -மூச்சை உள் நிறுத்துதல்
*ரேசகம்-* மூச்சை வெளிவிடுதல்
*சூன்யம்* -மூச்சை வெளிவிட்ட பின்கும்பகத்தில் உள்நிறுத்துதல்
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

*👃மூச்சுப் பயிற்சி*👃

*எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கானவழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக       செய்வதுநன்மை தரும்.*

*நம்முடைய சுவாசம் சரியாகஇருக்கும் பட்சத்தில் உடலும்,  மனமும்புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது,  நம் செயல்களில் கவனம் செலுத்தமுடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெறமுடியும்.*

*பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சுவிடுதல் ஒரு கலையாக இருந்தது.  அதை கற்றதால் உடலில் மட்டுமின்றிவாழ்க்கையிலும் சாதிக்க  முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான்.  அதைபத்து முறையாக்கும்போதுபுத்துணர்ச்சி கிடைக்கும்.*

*இதனை தியானத்தின் மூலம்பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால்பலன் கிடைக்கும். முதுகை  நேராகவைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடிநிதானமாக மூச்சு  விட்டால் புதியஅனுபவத்தை உணரலாம்.*

*மூச்சுப்பயிற்சி செய்பவர்கள்காலையில் 5 நிமிடம் மாலையில்  5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்துவெளியே விட்டால் நல்ல  மாற்றம்தெரியும்…*
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️



No comments:

Post a Comment